நண்பர் கரிகாலன் மன்மதன் அம்பு போகலாமா? என்று கேட்டபொழுது யோசிக்காமல் போகலாம் என்று கூறிவிட்டேன்!. கமல் படம் என்றால் குறைந்த பட்ச உத்திரவாதம் இருக்கும் என்ற நம்பிக்கையிலும், இந்த பதிவில் எனது முதல் திரை விமர்சனத்தை எழுதலாம் என்ற ஆவலிலும்!. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகங்கையில் உள்ள ஒரு திரையரங்குக்கு சென்று படம் பார்த்தோம். பிறகுதான் தெரிந்தது மக்கள் ஏன் திரையரங்குக்கு வராமல் வீட்டில் உட்கார்ந்து ---சி.டி–யில் படம் பார்க்கிறார்கள் என்று!. எல்லா நடிகர்களும் விபரம் தெரியாமல் கத்திக்கொண்டிருக்கிறார்கள் ‘திருட்டு சி.டி–யில் படம் பார்க்கவேண்டாம் திரையரங்கத்துக்கு வாங்க!’ என்று.
Dec 26, 2010
பிச்சைராமனும் கீரபோண்டாவும்!
Dec 25, 2010
சொன்னாலும் சொன்னார்கள்
ஒரு யானையின் மீது ஒரு கொசு வந்து அமர்ந்ததாம். எதுவும் சொல்லாமல் நீண்ட நேரம் அமர்ந்திருந்த அந்த கொசு, போகும்போது சத்தமாக யானையிடம், ‘நான் போகிறேன்’ என சொல்லிவிட்டுப் பறக்க எத்தனிக்க...’நீ எப்ப வந்த...என்கிட்ட போறேன்னு சொல்றியே..?’ என்று கொசுவிடம் சிரித்தபடி கேட்டதாம் யானை. இந்த கதையில் யானை –வைகோ!
‘இந்த கட்சியை(தி.மு.க) யாராலும் அழிக்க முடியாது. நம்மவர்களால் மட்டுமே முடியும்’ என்றார் அண்ணா!
நம்மவர்கள் என்று ‘அ’ சொன்னது ‘ஆ’ வைத்தானா?
‘என் இளமைக்கும் சுறுசுறுப்புக்கும் காரணம், நான் சாப்பிட உட்காரும்பொழுது பசியுடன் உட்காருவேன். எழுந்திருக்கும் பொழுதும் பசியுடன் எழுந்திருப்பேன்!’
Dec 19, 2010
நாட்டாமை அமெரிக்காவின் மனிதாபிமானம்!?
உலக நாடுகளின் காப்பாளனாக தன்னை கருதிக்கொள்ளும், அதிமேதாவி அமெரிக்காவின் அத்து மீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த விக்கிலீக்ஸ் ‘ஜுலியன் அசேஞ்ச்’ தான் இன்றைய உலக ஹீரோ!.
உலகளவில் தனக்கிருக்கும் நெட்வொர்க் மற்றும் சர்வாதிகாரத்தின் மூலம் பல தடைகளை ஏற்படுத்தியும், அசராமல் அடுத்தடுத்து ‘விக்கிலீக்ஸ்’ வெளியிட்டுகொண்டிருக்கும் ஆதாரங்களால் இஞ்சி தின்ற குரங்காக அமெரிக்கா திணறிக்கொண்டிருக்கிறது!.
விக்கிலீக்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ ஆதாரம், ஈராக்கில் அமெரிக்கா செய்த அட்டூழியத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது!.
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம், சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்சுக்கு புகைப்படம் எடுக்கும் நமீர் மற்றும் சயீத் ஆகிய இருவரையும் பத்திரிக்கையாளர்கள் என்று தெரிந்தே சுட்டுக்கொல்கிறார்கள்!. அவர்களுக்கு உதவிசெய்ய வரும் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி செல்ல வரும் வேனையும் சுடுகிறார்கள். அந்த வேனில் இருந்த இரண்டு குழந்தைகள் காயப்படுகிறார்கள்!. அவர்களை மருத்துவமமனைக்கும் அழைத்துச் செல்லாமல் அப்படியே விட்டுவிட்டு செல்கிறார்கள். மேலும், இறந்து கிடக்கும் சடலங்கள் மீது ஏறி இறங்கி செல்லும் டாங்கியை பார்த்து, ஹெலிகாப்டரில் இருக்கும் ராணுவத்தினர் ரசித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர்!.
இதுதான் உலக நாடுகளின் காப்பாளனாக தன்னை கருதிக்கொள்ளும் நாட்டாமை அமரிக்காவின் “மனிதாபிமானம்!?”
விக்கிலீக்ஸ் வெளியிட்ட மேற்கண்ட சம்பவங்கள் அடங்கிய வீடியோ:
விக்கிலீக்ஸ் வெளியிட்ட மேற்கண்ட சம்பவங்கள் அடங்கிய வீடியோ:
Dec 15, 2010
குருஞ்செய்தி நகைச்சுவை!
என் அலைபேசிக்கு வந்த சுவாரசியமான குருஞ்செய்தி:
தமிழ் ஹீரோக்கள் அடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் தலைப்புகள்!-கற்பனையாக!
அஜித் : மங்காத்தா, மாரியாத்தா, செல்லாத்தா
சூர்யா : சிங்கம், கரடி, கழுதை
கார்த்தி: நான் மகான் அல்ல!, நான் நடிகன் அல்ல!, நான் மனுஷன் அல்ல!
தனுஷ்: படிக்காதவன், எழுதாதவன், வெளங்காதவன்
ஜீவா : SMS, MMS, MISSED CALL
விஷால்: சத்யம், இன்போசிஸ், விப்ரோ
சிம்பு : விண்ணை தாண்டி வருவாயா!, செவர தாண்டி வருவாயா!
மாதவன் : குரு என் ஆளு, நமீதா உன் ஆளு, ரஞ்சிதா யாரு ஆளு?
- இந்த தலைப்புகளில் படங்கள் வரும்வரை மட்டுமே, இது நகைச்சுவை!
புகை-பகை!
புகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந்தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் நேரும் இருதய நோய்களில், 20 சதவீதம் புகைபிடிப்பதாலேயே ஏற்படுகின்றன. புகை பிடிப்பதால் இருதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? சிகரெட்டில் இருந்து வரும் புகையில், 4,000 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் கலந்துள்ளன.
இவற்றில் முக்கியமான இரண்டு பொருட்கள், இருதயத்தையும், உடலின் அனைத்து உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களையும் வெகுவாக பாதிக்கிறது. அவை...
Dec 14, 2010
விபத்தை தவிர்ப்போம்!
இருப்பினும்....,
இந்த சம்பவத்தை எழுதிய நோக்கம், நான் பட்ட கஷ்டங்களை சொல்லவேண்டும், அதனால், என்மேல் அனுதாபம் வரவேண்டும் என்பதற்காக அல்ல!. அதனால்தான் கொஞ்சம் நகைச்சுவை கலந்து எழுதினேன்!. சாலைப்போக்குவரத்தில் ஒரு எச்சரிக்கை தேவை, என்பதற்காக எழுதப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை அது!. “அனுபவிச்சு எழுதியிருக்கேன்” என்று தாராளமாக சொல்லலாம். ஒரு சாதாரண விபத்தின் பாதிப்புகளே இப்படி இருக்கும் போது, இதைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய விபத்துக்களை நாம் அன்றாடம் செய்திதாள்களில் படிக்கிறோம்!, தொலைகாட்சி செய்தியில் பார்க்கிறோம்!, கேள்விப்படுகிறோம்! ஏன்..., சில நேரங்களில் நேரிலும் பார்க்க நேரிடுகிறது! அப்போதெல்லாம், நமக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் அதில் பாதிக்காதவரை, அது நமக்கு ஒரு செய்தி!. அந்த விபத்தின் பாதிப்புகள் சம்பந்த்தப்பட்டவர்களையும், அவர்களின் உறவினர்களையும் எந்த அளவு அலைகளிக்கின்றன என்பது அளவிடமுடியாதது!.
Dec 11, 2010
"அது" திகில் கதையின் முடிவு!
"அது" திகில் கதையின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கதையை படித்த உங்கள் மனதைரியத்துக்கு வாழ்த்துக்கள். இப்போது கதையை முடிவுடன் சேர்த்து படித்துக்கொள்ளுங்கள். சரியான முடிவை சொன்ன 'சாலைக்கிராமம் சுரேஷ்'-க்கு "வாழ்த்துக்கள்!". அடியாள் அனுப்ப நினைக்கும் மற்றவர்களுக்கு, "மன்னிக்க வேண்டுகிறேன்..."
அது -திகில் கதை>>
அது -திகில் கதை>>
பாலித்தீன் பேக் தவிர்ப்போம்!
இந்த பூமியின் இயற்கை வளங்களில் ஒரு இருபது சதவீதத்தை மட்டுமே மனிதன் தன் அறிவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அந்த இருபது சதவீதத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் அதேவேளையில், அதையும், மிகுதியான என்பது சதவீத இயற்கைவளத்தையும் நாம் தெரிந்தோ தெரியாமலோ கொஞ்சம் கொஞ்சமாக பாழ்படுத்திக்கொண்டு வருகிறோம் என்பதே கண்கூடான உண்மை.
Dec 10, 2010
சிரிக்கவைத்த நகைச்சுவைகள்!
நீதிபதி : “நீ செஞ்ச திருட்டுக்கு என்ன தண்டனை தெரியுமா?”
திருடன் : “நான் இந்த திருட்டு தொழில்ல இருந்து ராஜினாமா
பண்ணிடறேன் எசமான்!
நீதிபதி : “என்ன சொல்றே?”
திருடன் : “என்ன எசமான், எல்லோரும் தப்பு செஞ்சா, ராஜினாமா தானே
செய்றாங்க!”
_______________________________________________________________________போலீஸ்: “உண்மையை சொல்லுடா...இல்லைனா, எலும்பை
என்னிடுவேன்!”
திருடன் : “அண்ணா நகர் ஸ்டேஷன்ல ஏற்கனவே எண்ணிட்டங்க.
வேணும்னா போன் பண்ணி கேட்டுக்குங்க சார்!
Dec 9, 2010
அஞ்சல் அட்டையில் ஒரு மாத இதழ்!
இன்றைய நவீன அவசர உலகில், பத்திரிக்கை படிக்கும் பழக்கம் மக்களிடைய குறைந்து கொண்டு வரும் சூழலில், பத்திரிக்கை நடத்துவது எளிதல்ல. அதிலும் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் பத்திரிக்கை நடத்துவது என்பது சாதாரணமல்ல. இதில் விதி விலக்காக சிவகங்கை ஓவியர் நண்பர் முத்துகிருஷ்ணன் தொடர்ந்து 16 ஆண்டுகளாக 50 பைசா அஞ்சல் அட்டையில் "அணு"என்ற பெயரில் மாத இதழ் நடத்திக்கொண்டிருக்கிறார்.
Dec 8, 2010
விபத்து!
தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள்தான் இருந்ததால், சிறுவர்கள் அதை வரவேற்று தெருவில் வெடிவெடித்து பெற்றோரின் காசை கரைக்க ஆரம்பித்தார்கள். அரசு அலுவலர்கள் வாங்கிய போனசின் மிச்ச சொச்சதையும் காலிசெய்யும் விதமாக விளம்பரங்களை பார்த்துவிட்டு தேவையில்லாத பொருட்களை வாங்கிவிட்டு, தீபாவளியன்று செலவுக்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த, நவம்பர் 2, காலை வேளையில் அந்த விபத்து நடந்தது எனக்கு!
Dec 2, 2010
“அது!”
-ஒரு திகில் கதை
(இதய பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்)
அது ஒரு அம்மாவாசை நாள். நட்சத்திரங்கள் கூட ஒன்று விடாமல் மொத்தமாக காணாமல்
போயிருந்தது. போக்குவரத்து வசதி குறைவான அந்த மலை கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள அந்த பேருந்து நிறுத்தத்திற்கு நான் வேக வேகமாக வந்து சேர்ந்த பொழுது இரவு மணி சுமாராக 11.30 இருக்கும். அந்த நேரத்தில் அவ்வழியே பொள்ளாச்சிக்கு ஒரு கடைசி பேருந்து போவதாக சொல்லியிருந்தார்கள். அந்த இடத்தில் தார்சாலையை ஒட்டி பெரிய ஆலமரம் ஒன்று, ஒரு அடையாளமாக இருந்தது. அந்த இடத்தில் மட்டும் ஆச்சரியமாக ஒரு மின் கம்பத்தில் குழல் விளக்கு ஒன்று மங்கிய ஒளியை தந்து கடமையற்றியது. அந்த கும்மிருட்டுக்கு அது போதுமானதாக இல்லாவிட்டாலும், சற்று தூரத்திற்க்குள் உள்ளவைகளை அடையாளம் காண உதவியாக இருந்தது. இங்கேதான் அந்த "அது" இருப்பதாக கடைக்காரர் சொன்னார்.
போயிருந்தது. போக்குவரத்து வசதி குறைவான அந்த மலை கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள அந்த பேருந்து நிறுத்தத்திற்கு நான் வேக வேகமாக வந்து சேர்ந்த பொழுது இரவு மணி சுமாராக 11.30 இருக்கும். அந்த நேரத்தில் அவ்வழியே பொள்ளாச்சிக்கு ஒரு கடைசி பேருந்து போவதாக சொல்லியிருந்தார்கள். அந்த இடத்தில் தார்சாலையை ஒட்டி பெரிய ஆலமரம் ஒன்று, ஒரு அடையாளமாக இருந்தது. அந்த இடத்தில் மட்டும் ஆச்சரியமாக ஒரு மின் கம்பத்தில் குழல் விளக்கு ஒன்று மங்கிய ஒளியை தந்து கடமையற்றியது. அந்த கும்மிருட்டுக்கு அது போதுமானதாக இல்லாவிட்டாலும், சற்று தூரத்திற்க்குள் உள்ளவைகளை அடையாளம் காண உதவியாக இருந்தது. இங்கேதான் அந்த "அது" இருப்பதாக கடைக்காரர் சொன்னார்.
Nov 30, 2010
இதெப்படி இருக்கு?
என் நண்பர் ஒருவர் “எந்திரன்” படம் வெளியான மூன்றாம் நாள் அப்படத்தை ரூபாய் 200 கொடுத்து பார்த்துவிட்டு “ஆகா... ஓகோ....” படம் மிகவும் பிரமாதம்! என்று புகழ்த்து பேசினார். எனக்கும் அப்படத்தை விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது..
மறுநாள் எங்கள் துணை அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சகோதரியை சந்தித்து பேசிக்கொண்டிருந்த பொழுது, யதேச்சையாக எந்திரன் படம் பற்றிய பேச்சு வந்த பொழுது, எங்களிடையே நடைபெற்ற உரையாடல்
மறுநாள் எங்கள் துணை அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சகோதரியை சந்தித்து பேசிக்கொண்டிருந்த பொழுது, யதேச்சையாக எந்திரன் படம் பற்றிய பேச்சு வந்த பொழுது, எங்களிடையே நடைபெற்ற உரையாடல்
Subscribe to:
Posts (Atom)