நீதிபதி : “நீ செஞ்ச திருட்டுக்கு என்ன தண்டனை தெரியுமா?”
திருடன் : “நான் இந்த திருட்டு தொழில்ல இருந்து ராஜினாமா
பண்ணிடறேன் எசமான்!
நீதிபதி : “என்ன சொல்றே?”
திருடன் : “என்ன எசமான், எல்லோரும் தப்பு செஞ்சா, ராஜினாமா தானே
செய்றாங்க!”
_______________________________________________________________________போலீஸ்: “உண்மையை சொல்லுடா...இல்லைனா, எலும்பை
என்னிடுவேன்!”
தொண்டர்: “நாட்டுல நீதி, நேர்மை, நியாயம், எல்லாம் செத்துப்போச்சு
தலைவரே!”
தலைவர் : “அப்ப, இனி எனக்கு எதிரிகளே இல்லைன்னு சொல்லு!
அரண்மனை சேவகன்-1: “நமது மன்னர் சின்ன சின்ன தவறுக்குக்கூட
பெரிய தண்டனை கொடுப்பார்!”
அரண்மனை சேவகன்-2: “எப்படி சொல்கிறாய்?”
அரண்மனை சேவகன்-1: “மாமன்னர் வருகிறார் என்று சொல்வதற்கு பதிலாக, மாமனார் வருகிறார் என்று சொல்லிவிட்டேன். உடனே, இளவரசியை எனக்கு கட்டிவைத்துவிட்டார்!”
“நம்ம கிளினிக் விளம்பரத்துக்கு ஒரு நல்ல வாசகம் சொல்லேன்?”
“கூட்டிட்டு வாங்க.... தூக்கிட்டு போங்க!”
“நம்ம தலைவர் டாக்டர் பட்டம் வாங்க நாயா அலைஞ்சாரே... என்னாச்சு?”
“வெட்னரி டாக்டர் பட்டம் தந்துட்டாங்க”
“அமைச்சரே! ஆறுமாதங்களாக ஆராய்ச்சி மணியை யாருமே அடிக்கவில்லையே, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?”
“ஆராய்ச்சி மணியை சைலன்ட் மோடில் வைத்திருக்கிறோம் மன்னா!”
“7 வது வீட்ல ராகு பார்ப்பதால், உங்க பொண்ணுக்கு நல்ல யோகம்!”
“அப்பா, ஜோசியர் தப்பா சொல்றார். அவரு பேரு ராகு இல்ல... ரகு!”
“உன்னை கட்டிகிட்டதுக்கு பதிலா, ஒரு கழுதையை கட்டியிருக்கலாம்!”
“நல்ல வேளை அப்படி செய்யலை, நெருங்கிய சொந்தத்துல பொண்ணு கட்றது தப்புங்க!”
“அந்த பவுலர் ரொம்ப பயந்த சுபாவம்போல!”
“எப்படி சொல்ற”
“ ’நோ பால்’ போட்டதும் நேரா போயி பேட்ஸ்மேன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்குறாரே!”
“டாக்டர், இந்த மருந்தை எவ்வளவு நாள் சாப்பிடனும்?”
“இருக்குற வரைக்கும்!
கேடி1 : "என்ன இப்பல்லாம் கொலை கொள்ளை எதிலும் ஈடுபடாம
இருக்க? திருந்திட்டியா?"
கேடி2 : "பசங்க தலையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க, அதான்".
கேடி1 : "????"-----------------------------------------------------------------
சிரிப்பலை தொடரும்....இருக்க? திருந்திட்டியா?"
கேடி2 : "பசங்க தலையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க, அதான்".
கேடி1 : "????"-----------------------------------------------------------------
நன்றி விகடன்.
No comments:
Post a Comment