என் நண்பர் ஒருவர் “எந்திரன்” படம் வெளியான மூன்றாம் நாள் அப்படத்தை ரூபாய் 200 கொடுத்து பார்த்துவிட்டு “ஆகா... ஓகோ....” படம் மிகவும் பிரமாதம்! என்று புகழ்த்து பேசினார். எனக்கும் அப்படத்தை விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது..
மறுநாள் எங்கள் துணை அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சகோதரியை சந்தித்து பேசிக்கொண்டிருந்த பொழுது, யதேச்சையாக எந்திரன் படம் பற்றிய பேச்சு வந்த பொழுது, எங்களிடையே நடைபெற்ற உரையாடல்
மறுநாள் எங்கள் துணை அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சகோதரியை சந்தித்து பேசிக்கொண்டிருந்த பொழுது, யதேச்சையாக எந்திரன் படம் பற்றிய பேச்சு வந்த பொழுது, எங்களிடையே நடைபெற்ற உரையாடல்
“நேற்றுதான் படம் பார்த்தேன். தண்டம் சார்!”
“அப்படியா?! என் நண்பர் படம் நன்றாக இருப்பதாக சொன்னாரே?”
“படம் நல்லா இல்லை சார்! கொடுத்த காசு தண்டம்!”
“அடடா......! எவ்வளவு?” (என் நண்பர் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியதை நினைத்துக்கொண்டு கேட்டேன்)
“30 ரூபாய்”
“என்னது 30 ரூபாயா?”
“ஆமாம் சார். 30 ரூபாய் கொடுத்து DVD வாங்கி பார்த்தோம். வேஸ்ட்”
200 கோடி செலவு செய்து படம் எடுத்த கலாநிதி மாறனுக்கு தெரிவிக்கிரோமோ இல்லையோ 200 ரூபாய் செலவு செய்த என் நண்பர் இதை கேட்க்க வேண்டும் என்று நினைத்து அவருக்கு போன் போட்டு மேற்கண்ட இந்த உரையாடலை தெரிவித்தேன்.
அவர் என்ன மாதிரி ரியாக்ட் செய்திருப்பார் என்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்!
“
Brother simply super your creation.all the very best.get well soon.
ReplyDeletepaavam sir unga friend!
ReplyDelete