Dec 19, 2010

நாட்டாமை அமெரிக்காவின் மனிதாபிமானம்!?


லக நாடுகளின் காப்பாளனாக தன்னை கருதிக்கொள்ளும், அதிமேதாவி அமெரிக்காவின் அத்து  மீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த விக்கிலீக்ஸ் ஜுலியன் அசேஞ்ச் தான் இன்றைய உலக ஹீரோ!.
 
உலகளவில் தனக்கிருக்கும் நெட்வொர்க் மற்றும்  சர்வாதிகாரத்தின் மூலம் பல தடைகளை ஏற்படுத்தியும், அசராமல் அடுத்தடுத்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுகொண்டிருக்கும் ஆதாரங்களால் இஞ்சி தின்ற குரங்காக அமெரிக்கா திணறிக்கொண்டிருக்கிறது!.

விக்கிலீக்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ ஆதாரம்,  ஈராக்கில் அமெரிக்கா செய்த அட்டூழியத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது!.

2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மூலம்,  சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்சுக்கு புகைப்படம் எடுக்கும் நமீர் மற்றும் சயீத் ஆகிய இருவரையும் பத்திரிக்கையாளர்கள் என்று தெரிந்தே சுட்டுக்கொல்கிறார்கள்!.  அவர்களுக்கு உதவிசெய்ய வரும் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி செல்ல வரும் வேனையும் சுடுகிறார்கள்.  அந்த வேனில் இருந்த இரண்டு குழந்தைகள் காயப்படுகிறார்கள்!.  அவர்களை மருத்துவமமனைக்கும் அழைத்துச் செல்லாமல் அப்படியே விட்டுவிட்டு செல்கிறார்கள்.  மேலும், இறந்து கிடக்கும் சடலங்கள் மீது ஏறி இறங்கி செல்லும் டாங்கியை பார்த்து, ஹெலிகாப்டரில் இருக்கும் ராணுவத்தினர் ரசித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர்!.

இதுதான் உலக நாடுகளின் காப்பாளனாக தன்னை கருதிக்கொள்ளும் நாட்டாமை அமரிக்காவின் மனிதாபிமானம்!?
விக்கிலீக்ஸ் வெளியிட்ட மேற்கண்ட சம்பவங்கள் அடங்கிய வீடியோ:

                                                                       

No comments:

Post a Comment