
இன்றைய நவீன அவசர உலகில், பத்திரிக்கை படிக்கும் பழக்கம் மக்களிடைய குறைந்து கொண்டு வரும் சூழலில்,
பத்திரிக்கை நடத்துவது எளிதல்ல. அதிலும் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் பத்திரிக்கை நடத்துவது என்பது சாதாரணமல்ல. இதில் விதி விலக்காக சிவகங்கை ஓவியர் நண்பர் முத்துகிருஷ்ணன் தொடர்ந்து
16 ஆண்டுகளாக 50 பைசா அஞ்சல் அட்டையில் "அணு"என்ற பெயரில் மாத இதழ் நடத்திக்கொண்டிருக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால், சாதாரண பத்திரிக்கை என்று இல்லாமல் சாதனை முயற்சியாக தனது அபரிமிதமான ஓவிய திறமையை பயன்படுத்தி மாதத்திற்கு மாதம் வித விதமான கலை நயத்துடன் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இதழை வெளியிடுகிறார்.
அணு அஞ்சல் அட்டை இதழில், அறிவியல் செய்திகள், பொது அறிவு, கவிதை, நகைச்சுவை, கேள்விபதில், துளிகதை, வாசகர் கடிதம், பரிசுப்போட்டி விளம்பரம் மற்றும் ஓவியங்கள் என அவ்வளவையும் அடக்கி இருப்பதால் இதற்க்கு அணு என்று பெயர் வைத்திருப்பது மிகப்பொருத்தம்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த அணு, LIMCA BOOK OF RECORD –ல் சாதனை இதழாக இடம்பெற்றிப்பது வியப்பான செய்தி இல்லை!.
நண்பர் ஓவியர் எண்.முத்துகிருஷ்ணன் அவர்களின் சாதனை தொடர வாழ்த்துக்கள்!
தொடர்புக்கு: mobile: 9865522933 eMail: anumuthukrishnan@gmail.com
Congratulations for your great effort
ReplyDelete