Jan 1, 2015

அன்பானவர்களுக்கு,  வணக்கம்! 
          உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி! இந்த வாழ்த்துக்கள் கடைசிவரை  குறைந்துவிடாமல் மேலும் அதிகரிக்கும்படி நடந்துகொள்வது எனது கடமை.  ஒவ்வொரு வருடம் துவங்கும்பொழுதும் இந்த வருடம் எந்த துன்ப நிகழ்வுகளும் நமக்கோ மற்றவர்களுக்கோ நடக்காமல் இருக்க பலவகைளில் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.  ஆனால் அந்த வருட முடிவில் பார்த்தால் கடந்த வருடத்தை விட ஏகப்பட்ட துயர சம்பவங்கள் அந்தந்த வருடங்களில் நடந்துதான் வருகின்றன.  இயற்கை சீற்றம், விமான விபத்து, மருத்துவ சிகிச்சையில் மரணம், சாலை மரணம் கட்டிட விபத்து, தீவிரவாத தாக்குதல், பாலியல் வன்முறை, இதுமட்டுமில்லாமல் பலவகை பலமட்ட கொள்ளை, இயற்கை சுரண்டல்  இப்படி உலகில் உள்ள நம் அறிமுகமுள்ள, அறிமுகம் இல்லாத நண்பர்களுக்கு துன்பங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  கடைசியில் இறைவன் தன் OA-விடம் FILE வாங்கிப்பார்த்து எல்லாம் ரூல்ஸ் படிதான்(விதிப்படி) நடத்தியிருக்கிறார் என்று சமாதனம் ஆகிறோம்(!?)
             ஒருவகையில் பார்த்தால் அதுவும் நம் மன வலிமையை கூட்டும் ஒரு மருத்துவ முறைதான்! நம் துன்பங்களை முழுவதையும் அவரிடம் சொல்லிவிட்டு சும்மா இருக்காமல், நம் வழக்கமான கொள்கையை மாற்றாமல்,  எத்தகைய துன்பம் நேரினும், நம் கடமையை நேர்மையுடனும், மகிழ்வுடனும் செய்து முடிப்போம், . சிறிதளவேனும் சமூக அக்கறை கொள்வோம்,  அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வோம்,  ஒவ்வொரு நாளும் புதிதாக பிறந்ததாக எண்ணி அந்த நாளை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடிக்க முயற்சிப்போம்.  எதிர்வும் துன்பங்களை தாங்கும் மனவலிமைபெற முயற்சிப்போம்.  
                  நம் அனைவருக்குமே, இந்த புத்தாண்டு 2015 இனிதாகவே அமைய வாழ்த்துக்கள்!  

                                            அன்புடன் மதி 

1 comment:

  1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete