Apr 24, 2011

குரங்கு பிடிக்கும் பொழப்பு!

                    நான் கல்லூரி படித்து முடித்ததும்,  சிலரைப்போல்  அதாவது காதல் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் சொல்லுவாரே “ வில்லனாகி, ஹீரோவாகி, அப்படியே நேரடியா சி.எம். ஆகவேண்டும்” என்று அல்லது ஒரு பாடல் முடிவதற்குள் டாட்டா,  பிர்லா ரேஞ்சுக்கு எங்கேயோ போவாங்களே!, அதுமாதிரி இல்லாவிட்டாலும் கொஞ்சம் கனவுகளை சுமந்துகொண்டு நானும் சென்னையில் ஒரு காலைப்பொழுதில் காலடி எடுத்துவைத்தேன். அங்கே எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தாலும் பிறகொரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி விரிவாக பதிவிடுகிறேன். இப்போது நான் சொல்ல வந்தது, எனது பங்கு சந்தை அனுபவத்தை பற்றி.  நான் அங்கு பங்குச்சந்தை இடைத்தரகர் ஒருவரின் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன்.             
           துவக்கத்தில் தாராளமானது வைத்து சம்பளம் ரூபாய் 1000 கொடுத்தார்கள்.  அந்த நிறுவனத்தில் மேனேஜர் வேலை என்று சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது அலுவலகத்தை கூட்டிப்பெருக்கும் வேலைக்கார அம்மாவை தவிர்த்து நான்மட்டும்தான் சம்பளக்காரன். எனக்கு அப்போது சம்பளம் பெரிதாக தெரியவில்லை.  காரணம் பங்குசந்தையை ஒரு கை பார்க்கவேன்டும் என்ற எண்ணம் இருந்ததால்.   அந்த கால கட்டத்தில் பங்குச்சந்தை கணினிமயமாக்கப்படவில்லை. ஆன்லைன் விற்பனை, டிமேட் கணக்கு கிடையாது. 
           பங்குசந்தையில் கத்திரிக்காய் கணக்காக கூவி கூவி ஷேர் விற்பார்கள். அதையும் அப்போதைய தூர்தர்சனில்தான் பார்த்திருக்கிறேன். மாலை மூன்று மணிக்கு மேல்தான் பங்குகள் என்ன விலைக்கு போயின என்று தெரியவரும்.
           ஆனால் சென்னையில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் கூட பங்குகளை வாங்கி விற்று நம்பிக்கை இழக்காமல் முடிந்தால் கையில் காசு பார்த்துக்கொண்டிருப்பார்கள். எல்லோரும் பங்குசந்தையில் பங்குகள் வாங்கி விற்று லட்ச லட்சமாக சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!.
           எனக்கு அந்த (துர்)பாக்கியம் அந்த நிறுவனத்திலிருந்து விலகும்வரை கிட்டவில்லை.  காரணம் எனக்கு சம்பளம் 1000-லிருந்து  2000-வரை உயர்தப்பட்டலும்  சென்னையை பொருத்தவரை கையில் வாங்கும் சம்பளம் திருவல்லிக்கேணி மேன்சன் வாடகைக்கும், சாப்பாட்டிற்கும், மாதம் இருமுறை தேவி காம்ப்ளக்சில்  பார்க்கும் சினிமாவிற்கும்  போதவில்லை.  மாத கடைசியில் ஊரிலிருந்து மணியார்டர் வந்தால்தான் மெஸ் சாப்பாடு கிடைக்கும். 

Apr 20, 2011

தங்கராசு!

சிறுகதை - சேர்முகபாண்டியன்
                                 தங்கராசை நீண்ட வருடங்களுக்குப்பிறகு எங்க ஊரில் பார்த்தேன். ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த நான், அந்த வேலையை முடித்துவிட்டு மாலை மதுரை செல்லும் பேருந்திற்காக காத்திருந்த பொழுது  தங்கராசை எதேச்சையாக பார்த்தேன். அடையாளம் கண்டுகொண்டு அதே தயக்கத்துடன் அருகில் வந்தான்.
“எப்படி இருக்க தங்கராசு?” என்றேன்.
அவன் சொன்ன பதிலை கேட்டவுடன் முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை!  அவன் வார்த்தையிலும் முகம் காட்டிய உணர்ச்சிகளிலும் கோபம இல்லை.  ஆனால் ஒரு ஆதங்கமும், ஏமாற்றமும் தெரிந்தது.  எதற்க்காக அப்படி சொன்னான்?. என்று எனக்கு யோசிக்க நேரம் தேவைப்பட்டது.
“என்ன தங்கராசு சொல்ற”
“ஆமாம் நீங்க எழுதிக்கொடுத்த ஒரு கடிதத்திலேயே என் வாழ்க்கை, இதோ இந்த சட்டையை போல் ஆகிவிட்டது”. இப்போது முகத்தில் செயற்கையான ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அழுந்தச் சொன்னான்.

Apr 18, 2011

மதுரை முதல் மத்தி வரை-மூன்று ரியல் ஹீரோக்கள்!

கடந்த வாரங்களில் மதுரையிலிருந்து டெல்லி வரை இந்திய மக்களை சிந்திக்க வைத்து, நேர்மைனா என்ன? (ஊழல்) கரை நல்லது! என்று நினைத்துக்கொண்டிருந்த பலரை தூக்கமிலக்கச் செய்து, மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்ப்படுத்திய,  கீழ்க்கண்ட இந்த மூவருக்கும் ஊருலகதின் வாழ்த்துக்கள்! தொடரட்டும் இவர்கள் பணி!


ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்! பல்வேறு துறைகளுக்கு தூக்கியடிக்கப்பட்டலும்,  ஊழல் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தியவர்!

மதுரை -மாவட்ட ஆட்சியர் திரு சகாயம்






ஊரை கூட்டி அலப்பறை பண்ணி, படிக்கும் மாணவர்களையும்,  நோயாளிகளையும் மக்களையும் நோகடித்து நடக்கும் தேர்தலை தவிர்த்து உண்மையான அமைதிப்பூங்காவாக தேர்தல் நேரத்தில் தமிழகத்தை மாற்றிக்காட்டிய 

மாநில தேர்தல் ஆணையர் திரு பிரவீன்குமார்.


அரசியல், பதவிகள் என்னும் முகமூடிகளை போட்டுக்கொண்டு,  எதை சுருட்டலாம் என்று யோசித்து காலம் காலமாக ஊழலையும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக செய்துவந்தவர்களை கண்டு மக்கள் கையாலாகாமல் வெறுத்துப்போய். இவர்களை ஒழிக்க ஒரு இந்தியன் வரமாட்டானா என்று  ஏங்கி இருந்த நேரத்தில் முடக்கப்பட்டு கிடந்த லோக்பால் மசோதாவை நிறைவேற்ற குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருந்து, அதன் மூலம் மக்களிடையே ஒரு அமைதியான புரட்சித்தீயை பரவச் செய்த

காந்தியவாதி அன்னா ஹசாரே

Mar 21, 2011

நொறுக்குத்தீனி!

அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து, என்ன ஒண்ணுமே போடலையா, என்று கேட்கும் அன்பர்கள் மன்னிக்கவும்.  தாங்கள் இவ்வளவு விரைவில் ஆயிரத்தை தாண்டி ஹிட் அடிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றி!  எழுத நிறைய விசயங்கள் இருக்கிறது. ஆனால் நேரம்? .... இனி வாரம் குறைந்த பட்சம் ஒருமுறையாவது  எழுத முயற்சிக்கிறேன்.
=========================================================================
எப்போதும் இல்லாத வகையில் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் மிகவும் கெடுபிடியாக இருப்பது சில பணக்கார கட்சிகளுக்கு வயிற்றை கலக்கியிருக்கிறது.   ஆங்காங்கே வாகன சோதனைகளில் கட்டு கட்டாக ரூபாய்களும், நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இருந்தால் கைக்கு திரும்பி வரும். இல்லையேல் அரசு கஜானாவுக்கு போவதில் தப்பில்லை.  நேர்மையான தேர்தலை நடத்துவதில் தேர்தல் கமிஷன் முனைப்பு காட்டுகிறது.  ஆனால் நேர்மையான ஒரு வேட்பாளரை சட்டசபைக்கு அனுப்புவதில் வாக்காளர்கலாகிய நாம்தான்  கவனம் செலுத்த வேண்டும்.
=========================================================================
ஆனந்த விகடன் 23.3.2011  தேதியிட்ட இதழில் அரசியல் தலைவர்களுக்கு, சமுகத்தில் மரியாதை மிக்க மனிதர்கள்  கீழ்க்கண்டவாறு மதிப்பெண் வழங்கி  இருக்கிறார்கள். பாஸ் செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!. இன்னும் 
நிறைய மார்க் வாங்க முயற்சி செய்யுங்க.  பெயில் ஆனவர்களுக்கு - நல்லா படிச்சி  குறைந்த பட்சம் பாஸ் செய்ய பாருங்க.
       1.       கருணாநிதி   -4௦
       2.       ஜெயலலிதா  –35
3.       விஜயகாந்த்   –21
4.       வைகோ      -41
5.       ராமதாஸ்     -31
6.       ஸ்டாலின்    -31
7.       தா.பாண்டியன் –42
8.       சரத்குமார்     -10
9.       திருமாவளவன்_33
10.   தங்கபாலு     _09

அரசியல் கட்சிகள் போட்டி போட்டு இலவசங்களை வாரி வழங்க முற்பட்டுள்ளன.   இலவசங்களை கொடுத்து அப்பாவி மக்களை மயக்கலாம்.  மக்களும் எதோ தங்கள் காசு திரும்பி வந்ததே வந்த வரை லாபம் என்று நினைக்கலாம்.  ஆனால் இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. இருந்தாலும் சில கட்சிகள் நிறைய இலவசங்களை வாரி வழங்கி விட்டதால், மற்ற கட்சிகள் என்ன செய்யாலாம் என்று மூளையை(?) கசக்கி சிந்தித்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்காக நான் உட்கார்ந்து யோசித்து கீழ்க்கண்ட சலுகைகளை தருகிறேன்.

1.   ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நபருக்கு தினமும் நான்கு இட்லி கொஞ்சம் கெட்டி சட்னி (யோசனைக்கு  நன்றி மதி-தினமணி)

2.    கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் 1000 SMS  இலவசம்.
(கடி ஜோக்ஸ் தயாரித்து வழங்கப்படும்)
3.    மாதம் ஒரு நான்கு சினிமா டிக்கெட் இலவசமாக வழங்கப்படும், தி.மு.க என்றால் சனி ஞாயிறு தவிர்த்து(அன்று மானாட மயிலாட இருப்பதால்) மற்ற நாட்களில் அதுவும் கலைஞர் கதை வசனம் உள்ள படங்களுக்கு மட்டும். அ.தி.மு.க. என்றால் விஜய் படத்துக்கு.
4.  வீட்டுக்கு மாதம் 100 unit  மின்சாரம் இலவசம் (மின் வெட்டு உள்ள நேரங்களில் மட்டும்)
5.  வீட்டு வாடகையை அரசே கொடுக்கும். பிளாட் பாரத்தில் வசிப்பவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு பாய், இரண்டு தலையணை இலவசம்.
6.   வீட்டில் சமைத்து, துணி துவைத்து, காயவைத்து, அயன் செய்து, பாத்திரம் கழுவி, வீட்டை கூட்டி, பள்ளிக்கு போகும் பையன்களை குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்ப ஆயாமார்கள் அரசு சம்பளத்தில் வேலை வாய்ப்பு  பதிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படும்.
7.   வரன் தேடுபவர்கள் கோரிக்கையை ஏற்று அரசாங்க மேட்ரிமோனியல் இணைய தளம் ஏற்படுத்தப்படும். www.governmentmatrimony.com
8.    டாஸ்மார்க் கடைகளில் ஒரு குவாட்டருக்கு ஒரு முட்டை இலவசம்.

      என் பையன் எனக்கு ஒன்றும் இல்லையா என்றான்!

      இதோ அவனுக்கு, 
9.   இனி பள்ளிகளில் ஹோம் வொர்க் கொடுக்கக் கூடாது.

      "ஹையா....ஜாலி"
       என் பையன் சொல்லவில்லை!  நான் தான் கூவினேன்!

சரி, நீங்களும் கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்.
  
படித்து ரசித்த தேர்தல் ஜோக்:

“தலைவர் ஏன் கோபமா இருக்கார்”

“ஒரு வீட்டுக்கு ஒட்டு கேட்கபோய், நான் உங்க உங்க வீட்டு பிள்ளை என்று சொல்லி இருக்கிறார்.  அதற்க்கு அந்த வீட்டு பெரியம்மா, ‘ஏன்  இப்படி உருப்படாம ஊரை சுத்திகிட்டு இருக்கே? என்று கேட்டு கொட்டு வைத்து விட்டாராம்”.

=============================================================
ஆச்சர்ய மனிதர்கள்:

சமீபத்தில் ஒரு செய்தி தாளில் படைத்த நெகிழ்ச்சியான செய்தி.

ஆயுள் தண்டனை பெற்று 10 வருடங்களுக்குமேல் மதுரை சிறையில் இருக்கும் தன் மகனை பார்க்க 80 வயதான தாய், பல வருடங்களாக முயற்சி செய்து சமீபத்தில் சந்தித்து பாசமழை பொழிந்தது இருக்கிறார். நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. அதை விட நெகிழ்ச்சியான செய்தி, அந்த மூதாட்டி  தன் மகனை சந்திப்பதற்கு மனுபோடுவதிலிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவரை பதிராமாக ஊருக்கு பேருந்து ஏற்றிவிட்டு உபகாரம்  செய்திருக்கிறார்கள் அந்த சிறை காவலர்கள்!.  நல்லமனம் வாழ்க!  
        இதை படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு ஒரு ஞாபகம் வந்தது.  ஒருமுறை எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு ஒரு பெரிய தொகைக்கு பணம் கொண்டுசெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  அப்பொழுது எனக்கு பாதுகாப்புக்கு அதாவது பணத்திற்கு பாதுகாப்பிற்க்காக ஒரு போலீஸ்காரர் உடன் அனுப்பப்பட்டார்(எஸ்கார்ட்). போலீஸ்காரர் என்றால் பொதுவாக எப்படி இருப்பார் என்று நான் அறிந்திருந்ததால் அவருடன் சகஜமாக பழகாமல் பேருந்தில் பயணித்தேன்.  அதன் பிறகு அவரின் செயல்கள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  போலீஸ்காரர்களை பொதுவாக தவறாக கருதியதர்க்காகவும் வருந்தினேன்.

            நான் பயணச்சீட்டு எடுக்க முற்ப்பட்டபொழுது,  அதை தடுத்து  தானே  பயணச் சீட்டு   வாங்கினார்.    பேருந்திலிருந்து இறங்கியதும் குளிர்பானம் குடிக்கலாம் என்று ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்.  அதற்க்கும்  என்னை ரூபாய் கொடுக்கவிடாமல் அவரே கொடுத்தார்.  நாங்கள் கொஞ்சம் சகஜமாக நிறைய விசயங்களை பேசினோம். திரும்பி வரும் பொழுதும் என்னை செலவு செய்ய விடவில்லை.  நான் அவரை ஆச்சர்யமாக பார்த்தபொழுது அவர் "என்ன சார் ஆச்சர்யமாக பார்க்கிறீர்கள் நான் வித்தியாசமானவன்,  இதனாலேயே என்னை என் நண்பர்கள் 'மெண்டல்' என்று கூறுவார்கள்"  என்றார்.  அதன் பிறகு அவர் என்னை எங்கு பார்த்தாலும் முதலில் வணக்கம் ( salute  )  சொல்வது அவராகத்தான் இருக்கும்.  இன்று எனக்கு நல்ல நண்பர் (அவரே எனக்கு அன்று செலவு செய்ததால் அல்ல).   நேர்மையானவர்கள் சில இடங்களில் சில நேர்மை தவறியவர்களுக்கு மென்டலாகத்தான்  தெரிவார்கள்.

கேட்க-ரசிக்க!

இளையராஜா இசையமைத்து ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற “இது ஒரு பொன் மாலை பொழுது”  பாடலை கேட்கும் பொழுது இன்றும் நம்மை எங்கோ தாலாட்டி அழைத்துச் செல்வதை உணரமுடிகிறது!. அமைதியான சூழ்நிலையில்  கேட்டுப்பாருங்கள், நீங்களும் இந்த பாடலை அப்படி உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!  இதோ உங்களுக்காக.....  

Mar 12, 2011

ஜப்பான்-ஆழிப்பேரலைகளின் கோரத்தாண்டவம்!


                                    நமக்கு வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் கிட்டும் பொழுது ஒரு சரிவு ஏற்படுவது இயற்கையின் நியதி!.  இதைதான் “ஒருபடி ஏறினால் ஒரு படி சறுக்குகிறது!” என்பார்கள்.   இந்த நியதிக்கு யாரும் தப்பியது இல்லை.  ஜப்பானியர்கள் பல எரிமலை சீற்றங்கள், சுனாமிகள், இரண்டாம் உலகப்போர் அணுகுண்டு வீச்சு, அதன் கதிவீச்சு பாதிப்பால் காலகாலமான ஜீன்களில் மாற்றமேற்ப்பட்டு ஊனங்களுடன் போராட்டம்! போன்றவற்றை சந்தித்தவர்கள்!. தங்களின் தன்னம்பிக்கையுடன் கூடிய அயராத உழைப்பால் இன்று உலக அரங்கில் ஜப்பான் சிறப்பான பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது!.
                                      ஆனால் இயற்கையின் சீற்றங்களை  யாரால் தடுக்க முடியும்,  இதோ இப்போது 8.9 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கமும், அதை தொடர்ந்து 10 மீட்டர் அளவுக்கு ஆழிப்பேரலையும் வந்து ஜப்பானை ஒரு புரட்டு புரட்டிவிட்டது.  இன்னும் கூட ஆபத்து ஓயவில்ல மூன்று அணுஉலைகள் வெடித்துவிட்டன!. அதன் கதிர் வீச்சு அபாயம் கூடிக்கொண்டே போகிறது!. 
                                  பொதுவாக ஜப்பானிய மக்கள் நில நடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளிளிருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டு வாழ்கையை தொடர பழகிக்கொண்டார்கள்.  கட்டிடங்களுக்கு கூட பெரிய அளவு சேதங்கள் இல்லை. காரணம் நில நடுக்கத்தை தாங்க கூடிய வகையில் கட்டிடங்களை கட்டுகிறார்கள்.  ஆனால் கதிர் வீட்சு போன்ற பேராபத்து அவர்களுக்கு ஒரு பெரிய சவாலக இருக்கும்.  ஜப்பானியர்கள் இத்தகைய பேரழிவுகளிளிருந்து மீண்டுவரும் தன்னம்பிக்கை படைத்தவர்கள். மீண்டு வருவார்கள்.
                                 இத்தகைய சூழ்நிலையில் உலக நாடுகள் தாராளமாக ஜப்பானியர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும.  லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் குடிநீர் இன்றி கடும் குளிரில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க முன்வர வேண்டும்.

                                 ஆரோக்கியாமான, பாதுகாப்பான அறிவியல் வளர்ச்சி தேவையானதுதான்.  ஆனால்  இயற்கையை காவு கொடுத்து வாங்கும் அறிவியல் வளர்ச்சி எனில்,  அது  தேவையில்லை!.  இதைத்தான் ஜப்பானிய  அணு உலை வெடிப்புகள்  உணர்த்துகின்றன. இயற்கையை விற்று விட்டு மனிதன் எதை சாதிக்க போகிறான்!.
                            ஜப்பானை மிதக்கவிட்ட ஆழிப்பேரலை வீடியோ கட்சிகள்:


Feb 20, 2011

ஜீவா(எ)ஜீவானந்தம்

என் நண்பர் ஒருவரிடம் ஜீவா தபால் தலை வந்திருக்கிறதே? வாங்கினீர்களா என்றேன்.
அவர் "நடிகர் ஜீவாவுக்கெல்லாமா தபால்தலை வெளியிடுகிறார்கள்?" என்றார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, "அவர் இல்லை அவருக்கு தபால் தலை வெளியிடுவார்களா?" என்றேன்.
"ஏன் வெளியிடக்கூடாது.  நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, அசின், ஆர்யா போன்றவர்களுக்கு அவர்களின் கலைச்சேவையை(?!) பாராட்டி கலைமாமணி விருது கொடுத்திருக்கும் போது இவர்களுக்கு தபால் தலை வெளியிட கூடாதா?" என்றார்.
எனக்கு நண்பரின் நக்கல் புரிந்தது.
"நீங்கள் கேட்டது இந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் ஜீவாவா?!" என்றார்.
பரவாயில்லை,  இந்த அளவுக்காவது தெரிந்திருக்கிறாரே என்று எனக்கு மகிழ்ச்சி!.
"ஆமாம்" என்று சொல்லிவிட்டு, ஒருவருக்கு இந்திய அஞ்சல்துறை தபால் தலை வெளியிடுகிறார்கள் என்றால் அவர் எப்பேர்ப்பட்டவராக இருப்பார்?.  

"மகாத்மா காந்தி  ஜீவாவை  "இந்தியாவின் சொத்து" என்று கூறியிருக்கிறார் என்றால், இவர் எத்தகைய தலைவர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்"  
எனக்கு தெரிந்த அளவு ஜீவாவை பற்றி சுருக்கமாக கூறினேன்.
இந்த பதிவின்மூலம் அவரைப்பற்றி இன்னும் விரிவாக........ 

Jan 27, 2011

FAITH எனும் நம்பிக்கை நாய்'கன்!



பெயர்:                    :   Faith

பிறந்த வருடம்:   டிசம்பர் 2002

பெற்றோர்           :   தெருவில்  கைவிட்டு விட்டு, மன்னிக்கவும்,  கால்விட்டு
                                     விட்டு  ஓடிவிட்டார்கள்!

காரணம்               :   பிறவி கோளாறு காரணமாக இரண்டு கால்கள் மட்டும்
                                     இருந்ததால்.

எடுத்து வளர்ப்பவர்கள்      : ஜுட்  ஸ்ட்ரிங் க்பெல்லோ என்ற  ஆசிரியையும்
                                                       அவர் மகனும் ( faithஐ   பராமரிப்பதர்க்காக 
                                                       வேலையை விட்டுவிட்டார்)

திறமை            : இரண்டு கால்களில் மட்டும் நடப்பது.


பதவி                : அமெரிக்க ராணுவத்தில்   'கௌரவ இ-4 ஆர்மி சார்ஜென்ட்'


Faith -ன் பணி :  போரில் உறுப்புகள் இழந்து காயம்பட்ட ராணுவ    
                              வீரர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவது.



உலகுக்கு  லொள்ள   நினைக்கும் செய்தி:

                            ' வாழ நினைத்தால் வாழலாம்!'       

Jan 25, 2011

இணைய வேகத்தை அதிகரிக்க

உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளமானது ISP பதிவிறக்க பேண்ட்வித் –லிருந்து ஒரு 20 சதவிகிதத்தை அப்டேட் மற்றும் ஸ்பைவேர் சோதனைக்காக எடுத்துக்கொள்ளும். எனவே நாம் 80 சதவிகித பேண்ட்வித்தை  மட்டுமே பயன்படுத்த முடியும்.
எனவே அந்த 20 சதவிகிதத்தை சேர்த்து 100 சதவிகிதம் பேண்ட்வித் வேகம் பெற உங்கள் கம்ப்யூட்டரில் பின்வரும்  சிறிய மாறுதலை செய்யலாம்.
 

Jan 14, 2011

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

ஒரு நண்பனின் கதை(?) இது

               என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இவர்.  இயல்பாக எவரிடமும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பலகிவிடுவார்!. இதனாலேயே இவருக்கு பொருத்தமான பதவி வழங்கப்பட்டுள்ளது!. ஒருநிமிட சந்திப்பாக இருந்தாலும் ஒருவருடம் கழித்து, அவரை எங்காவது சந்திக்க நேர்ந்தால், அவர் பெயரை சொல்லி சந்தித்த வருடம் முதல் அனைத்தையும் ஞாபகப்பதடுத்துவார்!.
இவர் சந்திக்கும் பத்தில் ஒருவர் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்   கல்லூரியில் படித்தவராகவோ அல்லது மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் படித்தவராகவோ இருப்பார்கள். 
‘நீங்க மதுரையா?...’
‘ஆமாம்’.
‘நானும் மதுரைதான்.  மதுரையில் எங்க?’
‘அய்யர் பங்களா’.
‘நானும் அங்கதான்!.  பக்கத்துல ரிசர்வ் லைன்!. அய்யர் பங்களாவுல எங்க?
(அப்படியே விசாரித்து இவர் தெரு வரை வந்து விடுவார்!)

ஓரளவு அறிமுகமாகிவிட்டால், அந்த நபரின் பிறந்த தேதி, அவர்களின் குழந்தைகள் பிறந்த தேதி, திருமண தேதி  கேட்டு, பிறகு மறக்காமல் ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் அலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லுவார்! (அவர்களின் நாய்க்குட்டியை தவிர!). என்னுடைய இந்த நண்பர் யார் என்று இந்த பதிவின் கடைசியில் சொல்கிறேன்! 

Jan 11, 2011

ஜேம்ஸ் கெமரூனின் அடுத்த அவதாரம்! SANCTUM

 
பிரபல ஹலிவூட் இயக்குனர் அலிஸ்டெர் கிரியெர்சொன் இயக்கத்தில் மோஷன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில்,டைட்டானிக், அவதார் பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜேம்ஸ் கெமரூன் மீண்டும் தயாரிக்கும் புதிய படமாக 'Sanctum' 3D யில்   வெளிவரவிருக்கிறது.   
தென் பசுபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஈஸா அலா அபூர்வ குகையை ஆராய்ச்சி செய்யப்போய் சந்தர்ப்பவசத்தால் இயற்கையின் கோரப்பிடிக்குள் சிக்கிக்கொள்ளும் ஆராய்ச்சிக்குழுவினர் பற்றிய நிஜக்கதை இது.
ஒரு படம் உருவாக்கவே 10 வருடங்களுக்கு மேல் செலவிடும் கெமரூன், இப்படத்தின் சிறந்த திரைக்கதை வடிவமைப்பினால் கவரப்பட்டு உடனடியாக இப்படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். மிகவேகமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் யாவும் முடிவு பெற்று வரும் பெப்ரவரி 4ம் திகதி திரை காணவிருக்கிறது இத்திரைப்படம்!

Jan 8, 2011

127 HOURS - ஆங்கில திரைப்பட விமர்சனம்


ஆஸ்கர் விருதுகள் பெற்ற ‘Slumdog Millionaire’ பட கூட்டணியில் மற்றுமொரு படைப்பு ‘127 HOURS’

இயக்கம்:  டேனிபாய்ல். இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் உலகமெங்கும் ‘கோல்டன் குளோப்’ உள்பட பல விருதுகளைப்பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின்  ஆள் நடமாட்டமில்லாத உடா பகுதியில் மலையேறிக்கொண்டிருக்கும் 28 வயது ஆரன் ரால்ஸ்டன் குறுகிய இரண்டு மலைதொடர்களுக்கிடையில் ஊர்ந்து மலை ஏறிக்கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று ஒரு சிறிய பாறை உருண்டுவந்து அதில் வலது கை மாட்டிக்கொள்கிறது.   சிறிது    கூட கையை அசைக்கமுடியாத இறுக்கம். 
ஐந்து நாட்கள் இரவுபகல் அங்கிருந்து மீள முயர்ச்சிக்கிறார். குடிப்பதற்கு இருந்த தண்ணீரும் காலியாகி தனது சிறுநீரையும் பிடித்துக்குடித்து உயிரை பிடித்துக்கொண்டு தன் கையை எடுக்க போராடுகிறார் முடியவில்லை.
எல்லா வகையிலும் போராடி பார்த்துவிட்டு முடிவாக, தன்னிடம் உள்ள ஒரு மழுங்கிய கத்தியைகொண்டு, வலியைப்பொருத்துக்கொண்டு, மெதுவாக தனது கையை வெட்டுகிறார். (அந்த கத்தி சரியாக தனது கையை அறுக்கவில்லை என்பதற்காக ஒருவசனம்-கொஞ்சம் புரிந்ததால் “Lesson. Don’t buy the chief  made in china items”)     கடினமான போரட்டதுக்குப்பின்பு தனது வலது கையை இழந்து உயிர் மீள்கிறார்.
இந்த உண்மைச்சம்பவத்தை மிக அருமையாக படமாக்கி இருக்கிறார்கள்.
படத்தை வெற்றிபெறச்செய்ததில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை இனிமையான இசையால் கலக்கி இருக்கிறார்.

                  ‘எத்தகைய சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது’ என்ற வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் படம்.
 டிரைலர்
 

Jan 6, 2011

சர்க்கரை நோய்!


போதை பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இவற்றின் ஒரே வித்தியாசம் சர்க்கரை அங்கீகரிக்கப்பட்ட பொருளாக உள்ளது. 
சர்க்கரை உடலில் அதிகமாக சேர்ந்து பின்னர் இன்சுலின் சுரப்பு பாதிப்பால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த சர்க்கரை வியாதி 2000 ஆம் ஆண்டில் உலகளவில் 17 கோடி பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் என எச்சரிக்கப்படுகிறது. இதுவே இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் 3 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 2030 ஆம் ஆண்டில் 8 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது. 
சராசரியாக ஒரு மனிதன் வருடம் ஒன்றிற்கு 80 கிலோ அளவிற்கு சர்க்கரையை எடுத்து கொள்கிறான். மனிதனின் வாழ்க்கையில் மெல்ல ஆக்ரமிக்கும் இந்த சர்க்கரை எவ்வாறு ஹெராயின் போன்ற போதைபொருளோடு ஒத்து போகிறது என பார்ப்போம். பாப்பி என்ற ஒரு வகை செடியில் இருந்து ஓபியம் என்ற பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. அது பின்னர் மார்பின் ஆக மாற்றப்படுகிறது. மேலும் அது சுத்திகரிக்கப்பட்டு ஹெராயின் என்ற போதைபொருளாக மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் இது வலி நிவாரணி ஆக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் அது படிப்படியாக போதைபொருள் பயன்பாட்டுக்கு உலகை கொண்டு சென்று விட்டது.

அணு 2011 புத்தாண்டு நாள்காட்டி - அரச இலையில்!

சிவகங்கை ஓவியர் நண்பர் முத்துகிருஷ்ணன், தனது மற்றுமொரு சாதனையாக புத்தாண்டு 2011 - க்கான நாள்காட்டியை அரச இலையில் வெளியிட்டுள்ளார்.  இவரின்  சாதனை முயற்சிகள் தொடர வாழ்த்துவோம்.  இவரை பற்றிய முன்தைய பதிவை படிக்க...