Mar 12, 2011

ஜப்பான்-ஆழிப்பேரலைகளின் கோரத்தாண்டவம்!


                                    நமக்கு வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் கிட்டும் பொழுது ஒரு சரிவு ஏற்படுவது இயற்கையின் நியதி!.  இதைதான் “ஒருபடி ஏறினால் ஒரு படி சறுக்குகிறது! என்பார்கள்.   இந்த நியதிக்கு யாரும் தப்பியது இல்லை.  ஜப்பானியர்கள் பல எரிமலை சீற்றங்கள், சுனாமிகள், இரண்டாம் உலகப்போர் அணுகுண்டு வீச்சு, அதன் கதிவீச்சு பாதிப்பால் காலகாலமான ஜீன்களில் மாற்றமேற்ப்பட்டு ஊனங்களுடன் போராட்டம்! போன்றவற்றை சந்தித்தவர்கள்!. தங்களின் தன்னம்பிக்கையுடன் கூடிய அயராத உழைப்பால் இன்று உலக அரங்கில் ஜப்பான் சிறப்பான பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது!.
                                      ஆனால் இயற்கையின் சீற்றங்களை  யாரால் தடுக்க முடியும்,  இதோ இப்போது 8.9 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கமும், அதை தொடர்ந்து 10 மீட்டர் அளவுக்கு ஆழிப்பேரலையும் வந்து ஜப்பானை ஒரு புரட்டு புரட்டிவிட்டது.  இன்னும் கூட ஆபத்து ஓயவில்ல மூன்று அணுஉலைகள் வெடித்துவிட்டன!. அதன் கதிர் வீச்சு அபாயம் கூடிக்கொண்டே போகிறது!. 
                                  பொதுவாக ஜப்பானிய மக்கள் நில நடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளிளிருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டு வாழ்கையை தொடர பழகிக்கொண்டார்கள்.  கட்டிடங்களுக்கு கூட பெரிய அளவு சேதங்கள் இல்லை. காரணம் நில நடுக்கத்தை தாங்க கூடிய வகையில் கட்டிடங்களை கட்டுகிறார்கள்.  ஆனால் கதிர் வீட்சு போன்ற பேராபத்து அவர்களுக்கு ஒரு பெரிய சவாலக இருக்கும்.  ஜப்பானியர்கள் இத்தகைய பேரழிவுகளிளிருந்து மீண்டுவரும் தன்னம்பிக்கை படைத்தவர்கள். மீண்டு வருவார்கள்.
                                 இத்தகைய சூழ்நிலையில் உலக நாடுகள் தாராளமாக ஜப்பானியர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும.  லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் குடிநீர் இன்றி கடும் குளிரில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க முன்வர வேண்டும்.

                                 ஆரோக்கியாமான, பாதுகாப்பான அறிவியல் வளர்ச்சி தேவையானதுதான்.  ஆனால்  இயற்கையை காவு கொடுத்து வாங்கும் அறிவியல் வளர்ச்சி எனில்,  அது  தேவையில்லை!.  இதைத்தான் ஜப்பானிய  அணு உலை வெடிப்புகள்  உணர்த்துகின்றன. இயற்கையை விற்று விட்டு மனிதன் எதை சாதிக்க போகிறான்!.
                            ஜப்பானை மிதக்கவிட்ட ஆழிப்பேரலை வீடியோ கட்சிகள்:


1 comment:

  1. nalla therampatta blogspot pothu makkalin nalanukkaga kalangali selawo seithu ulaikum thangalukku valthukkaal.



    anu-kalaimagal-sivagangai

    ReplyDelete