Jan 8, 2011

127 HOURS - ஆங்கில திரைப்பட விமர்சனம்


ஆஸ்கர் விருதுகள் பெற்ற ‘Slumdog Millionaire பட கூட்டணியில் மற்றுமொரு படைப்பு ‘127 HOURS’

இயக்கம்:  டேனிபாய்ல். இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் உலகமெங்கும் ‘கோல்டன் குளோப்’ உள்பட பல விருதுகளைப்பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின்  ஆள் நடமாட்டமில்லாத உடா பகுதியில் மலையேறிக்கொண்டிருக்கும் 28 வயது ஆரன் ரால்ஸ்டன் குறுகிய இரண்டு மலைதொடர்களுக்கிடையில் ஊர்ந்து மலை ஏறிக்கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று ஒரு சிறிய பாறை உருண்டுவந்து அதில் வலது கை மாட்டிக்கொள்கிறது.   சிறிது    கூட கையை அசைக்கமுடியாத இறுக்கம். 
ஐந்து நாட்கள் இரவுபகல் அங்கிருந்து மீள முயர்ச்சிக்கிறார். குடிப்பதற்கு இருந்த தண்ணீரும் காலியாகி தனது சிறுநீரையும் பிடித்துக்குடித்து உயிரை பிடித்துக்கொண்டு தன் கையை எடுக்க போராடுகிறார் முடியவில்லை.
எல்லா வகையிலும் போராடி பார்த்துவிட்டு முடிவாக, தன்னிடம் உள்ள ஒரு மழுங்கிய கத்தியைகொண்டு, வலியைப்பொருத்துக்கொண்டு, மெதுவாக தனது கையை வெட்டுகிறார். (அந்த கத்தி சரியாக தனது கையை அறுக்கவில்லை என்பதற்காக ஒருவசனம்-கொஞ்சம் புரிந்ததால் “Lesson. Don’t buy the chief  made in china items”)     கடினமான போரட்டதுக்குப்பின்பு தனது வலது கையை இழந்து உயிர் மீள்கிறார்.
இந்த உண்மைச்சம்பவத்தை மிக அருமையாக படமாக்கி இருக்கிறார்கள்.
படத்தை வெற்றிபெறச்செய்ததில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை இனிமையான இசையால் கலக்கி இருக்கிறார்.

                  ‘எத்தகைய சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது’ என்ற வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் படம்.
 டிரைலர்
 

No comments:

Post a Comment