என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இவர். இயல்பாக எவரிடமும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பலகிவிடுவார்!. இதனாலேயே இவருக்கு பொருத்தமான பதவி வழங்கப்பட்டுள்ளது!. ஒருநிமிட சந்திப்பாக இருந்தாலும் ஒருவருடம் கழித்து, அவரை எங்காவது சந்திக்க நேர்ந்தால், அவர் பெயரை சொல்லி சந்தித்த வருடம் முதல் அனைத்தையும் ஞாபகப்பதடுத்துவார்!.
இவர் சந்திக்கும் பத்தில் ஒருவர் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்தவராகவோ அல்லது மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் படித்தவராகவோ இருப்பார்கள்.
‘நீங்க மதுரையா?...’
‘ஆமாம்’.
‘நானும் மதுரைதான். மதுரையில் எங்க?’
‘அய்யர் பங்களா’.
‘நானும் அங்கதான்!. பக்கத்துல ரிசர்வ் லைன்!. அய்யர் பங்களாவுல எங்க?
(அப்படியே விசாரித்து இவர் தெரு வரை வந்து விடுவார்!)
ஓரளவு அறிமுகமாகிவிட்டால், அந்த நபரின் பிறந்த தேதி, அவர்களின் குழந்தைகள் பிறந்த தேதி, திருமண தேதி கேட்டு, பிறகு மறக்காமல் ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் அலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லுவார்! (அவர்களின் நாய்க்குட்டியை தவிர!). என்னுடைய இந்த நண்பர் யார் என்று இந்த பதிவின் கடைசியில் சொல்கிறேன்!
எந்த ஒரு விசயத்தையும் நமக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைத்து இவரிடம் பேசிவிட முடியாது. நான் சில முறை சில விசயங்களை இவரிடம் பேசி (எனது மேதாவித்தனத்தை காட்ட!) அதில் திருத்தங்கள் கூறி கொட்டு வைத்திருக்கிறார்!
ஒரு அலுவலகத்திற்குள் இவர் நுழைந்தால் வெண்கல கடைக்குள் யானை புகுந்தது மாதிரி!. உருவத்தில் அல்ல!. அந்த இடத்தை கலகலப்பாக மாற்றிவிடுவார் என்று சொல்ல வருகிறேன்! இவரிடம் ரகசியம் தங்காது. மனதில் பட்டதை தயங்காமல் சொல்லிவிடுவார். (குறுக்கு வழி பேர்வழிகள் இவரை பினாமியாக போடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்)
என்னைப்போல ஜூவி, ஆவி (ஜூனியர் விகடன், ஆனந்த விகடன்) தொடர் வாசகர். ராசா முதல் டாட்டா வரை, நித்தி முதல் சித்திவரை, இலங்கை பிரச்னை முதல் மாவோயிஸ்ட் பிரச்சனை வரை இவரிடம் விவாதிக்கலாம். இருப்பினும், இவர் அதிகம் ஆர்வம காட்டுவது, ஈடுபடுவது, பங்குச்சந்தை விசயங்கள். மணிக்கணக்காக பங்குச்சந்தை சமாச்சாரங்களை இவரிடம் பேசலாம். பலநேரங்களில் இவர் பங்குச்சந்தையில் காளை. சில நேரங்களில் கரடி. (காளை-கரடி பங்குச்சந்தை சமாச்சாரங்கள்).
இவரிடம் டிப்ஸ் வாங்கி நான் நிறைய சம்பாதித்து இருக்கிறேன்! ( அதற்க்கு பத்து மடங்காக இழந்திருக்கிறேன் என்பது நமக்குள் இருக்கட்டும்).
நாம் ஒரு கோவிலுக்கு சென்றால், சாமிகும்பிட்டுவிட்டு குருக்கள் கொடுக்கும் பிரசாதத்தை பெற்றுக்கொண்டு திரும்பிவிடுவோம். என்னை பொருத்தவரை அதிபட்சம் பொங்கலோ புளியோதரையோ கிடைத்தால் நல்லது என்று நினைப்பேன்! இவர், அந்த கோயில் எந்த வருடம், யாரால் கட்டப்பட்டது. கட்டிய கொத்தனாரின் பெயர் என்ன, அவருக்கு கூலியாக தானியமாக கொடுத்தார்களா?, தங்கமாக கொடுத்தார்களா? அந்த கோவிலுக்கு அந்த பெயர் வர காரணம் என்ன? அந்த கோவிலின் மேற்கூரை உபயதாரர் பதினான்காம் புலிகேசியின் பதினைந்தாவது மனைவியின் ஒன்று விட்ட சித்தப்பாவின் மருமகன் என்று வரலாறு சேகரித்துக்கொண்டிருப்பார்!.
தான் படிக்கும் காலத்திலேயே பேச்சுப்போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கையால் பெற்றிருக்கிறார்!. அதனால் எங்கேயும் யாரிடமும் பேசுவதில் குறைவைப்பதில்லை.
வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்! (யாராவது சீப்பு கொடுங்களேன். கொஞ்சம் தலையை சீவிக்கொள்ளட்டும்)
டைப்பிங்-ல் HIGHER GRADE பாஸ் செய்த என்னைவிட வேகமாக டைப் செய்வார், இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தி!.
பேருந்தில் சிவகங்கையிலிருந்து மதுரை செல்லும் அந்த ஒருமணி நேரத்திற்குள், இரண்டு தூக்கம் போட்டு, இரண்டு ஷோ கனவு கண்டு விடுவார்!(பேருந்து டிவியில் அரை ஷோ மட்டும்தான்!). அதென்ன இரண்டு தூக்கம் என்கிறீர்களா? இடையில் நடத்துனர் பயணச்சீட்டுக்காக எழுப்பிவிடுவார்!.
ஒரு மழை நாளில் இவரும் நானும் பைக்கில் செல்லும்பொழுது, எதிரில் பேருந்து வரவும், அதற்க்கு வழி விட்டு நிற்க, வேகத்தை குறைக்காமல் வந்த பேருந்து, சாலையில் தேங்கிய சாக்கடை கலந்த மழை நீரை எங்கள் மீது வாரி இரைக்க, அதில் தொப்பலாக குளித்து அழுக்காக நின்றோம்!. பிறகு அருகில் உள்ள ஒரு வீட்டின் தட்டி மறைவு குளியலறையில் குளித்து எங்கள் பயணத்தை தொடர்ந்தது, இது வரை யாரிடமும் சொல்லாத கதை! அந்த ஒரு சில நிமிடங்கள் நானும் அவரும் ஒரே நிறத்தில் இருந்தோம் என்பது எந்த நண்பர்களுக்கும் கொடுத்து வைக்காத நிகழ்வு.
பல நேரங்களில் அவருடைய வேலையை நானும், எனது வேலையை அவரும் பார்த்து, நேரத்தை சேகரித்திருக்கிறோம்! (TEAM WORK).
“என்னைய்யா உங்க நண்பரை பற்றி ஓவரா புகழ்றீங்க” என்கிறீர்களா?
இருங்க... வருகிறேன் விசயத்துக்கு!.
இப்படி பல.. பல... திறைமைகள் இருந்தாலும், அதிகம் சிந்திப்பதாலோ என்னவோ,
ஞாபகமறதி என்னும் குறையும் உள்ளது!.
பயந்துடாதீங்க எப்பவாவதுதான்.
பலமுறை அவருடைய பொருட்களை அலுவலகத்தில் மறந்து விட்டுவிட்டு சென்றிருக்கிறார்!(தன்னைத்தவிர). இவருடன் சேர்ந்து எனக்கும் சிலமுறை இந்த பழக்கம் வந்திருக்கிறது(ஆறுதலுக்கு சொல்லிக்கொள்கிறேன்).
ஒரு முறை அலுவலக தொலைபேசியில் யாருக்கோ டயல் செய்வதற்கு பதில், எனது அலைபேசிக்கே டயல் செய்து, ஒரு கையில் லேன்ட்லைன் ரிசீவரையும், மறுகையில் எனது அலைபேசியையும் வைத்து பேசியிருக்கிறேன் என்றால் எந்த அளவு பாதித்துள்ளேன் என்று யோசித்துக்கொள்ளுங்கள்!.
ஒருமுறை எனது பையை அவரும், அவருடைய பையை நானும் (ஒரே மாதிரி இருப்பதால்) எடுத்துச்சென்றிருக்கிறோம்!
இதுவாவது பரவாயில்லை!.
ஒரு நாள் எங்கள் அலுவலக பெண் ஊழியரின் பையை எடுத்துக்கொண்டு பஸ் ஏறிவிட்டார்!
(கோழி பிரியாணியில் முட்டை இருப்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது!. மட்டன் பிரியாணியில் முட்டை இருப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது?)
அந்த நண்பர், இந்த வலைப்பூவின் முதல் பதிவில் குறிப்பிடப்பட்ட நண்பர் வி.ஜெயசீலன் சேவியர்.
இவரின் பதவி MARKETING EXECUTIVE.! பதவிக்கு பொருத்தமான நபர்.
சரி இதுவரை இவர் பற்றிய கதை. இனி இவர் சொன்ன சுவாரசியமான கற்பனை கதை இதோ!
விற்பனை பிரதிநிதி – சிறுகதை.
ஒரு விற்பனை பிரதிநிதி தனது மறைவுக்கு பிறகு மேலோகம் செல்கிறார்!. (TA bill போட்டாரா?) அங்கு எமதர்மன், அலுவலக உதவியாளர் சித்திர குப்தன் உதவிகொண்டு இவருடைய CR மற்றும் SR ஆகியவைகளை பரிசீலனை செய்கிறார். பாதிக்கு பாதி நல்லது கெட்டது செய்திருப்பது தெரியவருகிறது!. எனவே ‘சொர்க்கம் வேண்டுமா?, நரகம் வேண்டுமா?’ என்று இவரிடமே OPTION கேட்கிறார் எமதர்மன்.
இவர், ‘சொர்க்கம், நரகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்!. உணமையில் எப்படி இருக்கிறது என்று தெரியாது!. எனவே இரண்டு இடங்களையும் பார்த்துவிட்டு யோசித்து சொல்கிறேன்’ என்கிறார். ஒருநாள் மட்டும் அவகாசம் வழங்கப்படுகிறது.
எமகாதகர்கள் இவரை முதலில் சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்கிறார்கள்.. அங்கு பசுஞ்சோலை, நீரோடை, குளு, குளு காற்று, அழகிய பறவைகள், இனிமையான இசை, பணிப்பெண்கள் எல்லாவகையான உணவு வகைகள் என்று பிரமாதமாக இருக்கிறது!. இவைகளுக்கிடையே இறைவன் அமர்ந்திருக்க அங்கிருந்தவர்கள் அவரை துதிபாடி இன்பமாக இருக்கிறார்கள்.
அடுத்து நரகத்திற்கு அழைத்துச்செல்கிறார்கள். அவரால் நம்பவே முடியவில்லை!. ஆச்சர்யமாக இருந்தது!. அங்கு குளு குளு அறையில் அவருடன் பணிசெய்த நண்பர்கள், மேலதிகாரிகள் அனைவரும் சமமாக அமர்ந்து எதை பற்றியோ தீவிரமாகவும், ஜாலியாகவும் பேசிக்கொண்டிருந்தார்கள்!. இடை இடையே சுவையான நொறுக்குத் தீனி, பானங்கள் வந்தது. மேலும் உணவு இடைவேளையில் அனைத்துவிதமான சைவ, அசைவ உணவு வகைகளும் வந்தது. முடிவில் ஐஸ் கிரீம் வழங்கப்பட்டது!.
இவர், அடடா... இவ்வளவு காலம் நரகத்தை பற்றி தவறாக எண்ணிவிட்டோமே! என்று வருந்தினார். உடனடியாக எமதர்மன் அலுவலகம் சென்று, எமதர்மனிடம், ‘எனக்கு நரகமே வழங்குங்கள்!’ என்று தீர்மானமாக கேட்டுக்கொண்டார். எமதர்மன் ‘ஏன் நரகத்தை தேர்ந்தெடுத்தாய்’ என்று கேட்டதற்கு, ‘அங்கு என் நண்பர்கள், நண்பர்களை போல பழகும் அதிகாரிகள் இருக்கிறார்கள் எனவே நான் அங்கு செல்கிறேன்’ என்று கூறினார்’.
எமதர்மன் ‘உன்னை நம்ப முடியாது, நரகத்தில் சேர்ந்த பிறகு சொர்க்கம் கேட்கமாட்டேன் என்று எழுதிக்கொடுத்து விடு’ என்றார். அவரும் விறு விறு என்று எழுதிக்கொடுத்துவிட்டார்.
‘நீ நாளை நரகத்தில் சேர்ந்துகொள்ளலாம். இன்று, இங்கு ஓய்வு எடு’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
மறுநாள்...
அதிகாலை, இவர் குளித்து முடித்து புதிய ஆடை உடுத்தி, மறக்காமல் இவர் பயன்படுத்தி வந்த BAG-ஐயும் எடுத்துக்கொண்டு தயாராகிறார். எமகாதகர்கள் வந்து நரகத்திற்கு அழைத்துச்செல்கிறார்கள்.
அங்கு இவர் கண்ட காட்சி இவரை திடுக்கிட வைக்கிறது!. நேற்று கண்டதற்கும் இன்று கண்டதற்கும் சம்பந்தமே இல்லாத காட்சியாக இருக்கிறது!.
அங்கு அவருடைய நண்பர்களை ஒரு பெரிய, கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் தனித்தனியாக போட்டு வறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்!. அவர்கள் அய்யோ! அம்மா! என்று கத்துவது காதைப்பிளக்கிறது. எழுந்து ஓட நினைக்கும் நண்பர்களையும் பிடித்து அமுக்கிக் கொண்டுவந்து எண்ணெய் கொப்பரையில் போடுகிறார்கள் எமகாதகர்கள்!. இவருடைய மேலதிகாரிகளை காணோமே என்று தேடுகிறார். அவர்களையும் விட்டுவைக்காமல் ஒரு ஓரமாக தீயில் தலை கீழாக தொங்கவிட்டு வாட்டுகிறார்கள் எமகாதகர்கள். ஆனால், விற்பனை பிரதிநிதி நண்பர்களை போலில்லாமல் நாகரீகம் கருதி யாருக்கும் கேட்காதவாறு அய்யோ, அம்மா என்று கத்துவது வாய் அசைவிலிருந்து தெரிகிறது!.
இவர் பக்கத்திலிருந்த எமகாதகனை பார்த்து, ‘என்னை ஏமாற்றி விட்டீர்கள் நேற்று இப்படி இல்லையே?, எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்களே? இன்று ஏன் இப்படி?’ என்று கேட்க,
எமகாதகன், “நேற்று நீங்கள் இங்கு வந்து பார்த்த போது ‘விற்பனை பிரதிநிதிகள் மீட்டிங்’ நடந்து கொண்டிருந்தது. மாதத்திற்க்கு ஒருமுறை நடக்கும்!. நீங்கள் அடுத்த மாதம் அதில் கலந்து கொள்ளலாம்” என்று கூறிவிட்டு, இவர் அலற.. அலற.. அங்கு கொதித்துக்கொண்டிருந்த மற்றொரு எண்ணெய் கொப்பரையை நோக்கி இலுத்துச்சென்றார்கள்!.
(குறிப்பு: இந்தக்கதை நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை கதை. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல)
அருமையான கதை
ReplyDeleteகதையை கொண்டு சென்ற விதம் அருமை
சிறந்த கதையாசிரியரை தமிழ் கதை உலகம் இனிமேலும் இழந்து விடக்கூடாது
Nanbar methu thaangal konda patru paaratirkuriyathu. Melum avarin karpanai kathai migavum arumaiyana naatu nadappu
ReplyDeleteella padathukum munnadi trailor eppavumea apudi tha sir, irukuthu!!
ReplyDeletepadathuku pona perukutha theriyuthu unmai!!!
ithai xavier padithara?
ReplyDelete1.மேடம் இது கொஞ்சம் இல்லை. நிறையவே எனக்கு அதிகமா தெரியுது.
ReplyDelete2.நன்றி மீனா மேடம்.
3.சுரேஷ் என்ன சொல்றீங்க. இது இந்த போஸ்ட்க்கான comment-டா?
4. பதிவிடுவதர்க்கு முன்பே படித்துவிட்டார் ராஜேஷ்.
Sir nice beautiful story.I think we are also in the same boat as such as ME(s)
ReplyDeleteDear Mathi
ReplyDeleteThis above all: to thine own self be true
---William Shakespeare in Macbeth
Sorry for the delayed response to your posting in your BLOG on Xavier. I am behind the times in the new-job environs( not a travel back to early times in a Time Machine but actually I am in such a working atmosphere ).Thambi Xavier is more than what you described. Indeed, it rekindled my memory. I always cherish each and every moment I spent with him. What to tell and what to leave? I have had opportunities to travel with him several times from Sivaganga to Madurai after attending some NFPE/CSPUC activities. We have talked over many a thing under the sky. I was awestruck by his knowledge and approach to the contemporary issues that affect the people in general and the working class in particular.
He is forthright in his views. In our Division, we used to conduct demonstrations in front of DO/HO for not less than two hours. At times it becomes unbearably long testing the patience of our members. His continued persuasion made us to realise the need to cut short such meetings within a time frame of not more than an hour .It has at last paid its dividends.
He preaches what he practices. Whatever meeting it be, his speech is sharp to the core. I vividly remember his thanks-giving speech in the Mathanallinakka maanaadu( Seminar on Religious Harmony) got up by the CSPUC in front of Aranmanai Vasal . As thanks-giving speech is normally a concluding affair, it is a tough task even for good orators to keep the attention of audience after the speech of the prominent speakers. Finally the meeting was addressed by the Thavaththiru Kunrakkudi adikalaar. After hearing his speech a large gathering of the audience was getting up and moving out of the venue. A sharp and attractive voice with a clear message from the dais made them to return to their chairs. It is the tone and tenor of Thambi Xavier that mesmerised all the people thronged for the meeting . It was a wonderful scene to see that all the religious heads and the CSPUC leaders in the dais have also become a gaping audience of his speech. It is not a solitary instance. But I have so many such stories to tell. I will write one by one the interesting anecdotes
With love
P.Sermuga Pandian
Thanks to my dear elder brother. Nanri sollavae, vaarthai illayae.
ReplyDeleteஅலுவலகத்தில் நண்பர்களும் உயர் அதிகாரிகளும் நரக வேதனை அனுபவிப்பதை தெளிவாக சொல்லி உள்ளீர்; மீட்டிங் நடக்கும் ஒரு நாள் தவிர.
ReplyDelete