(27.2.2012) சுஜாதாவின் நான்காவது நினைவு நாள். சுஜாதா எழுதாதது எதுவும் இல்லை! இலக்கியம், கதை, கவிதை, கட்டுரை, அறிவியல் விசயங்கள் என எதையும் விட்டுவைக்கவில்லை. இன்று அவர் தனது "கற்றதும் பெற்றதும்" கட்டுரை தொகுப்பில் 2010 எப்படி இருக்கும் என்று கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்! அவற்றில் பல உணமையாகி இருக்கின்றன.
2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.








