Aug 30, 2011

கமல்+கிரேசி=காமெடி சரவெடி!

கமல்+கிரேசி=காமெடி சரவெடி!
கமல்-கிரேசி மோகன் இணைந்தால்  படம் முழுவதும் தாராளமாக ரசித்து சிரித்து, வீட்டுக்கு வந்தும் சிரிக்கலாம். குடும்பத்துடன் தியேட்டருக்கு நம்பி செல்லலாம். இந்த காமெடி கூட்டணி மீண்டும் இணைவதாக ஒரு செய்தி எனக்கு இப்போதே ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. படத்திற்கு தலைப்பு “நண்பர்களும் 40 திருடர்களும்  என்பது தகவல். கமல் தற்போது “விஸ்வருபம் படவேளைகளில் இருக்கிறார். “மன்மதன் அம்பு பார்த்து நொந்த மனங்களுக்கு விரைவில் ஆறுதல் தாங்க கமல் சார்.
=============================================================================
குற்றமுள்ள நெஞ்சு!
ஒரு வழியாக அன்னா ஹசாரேவின் உண்ணா விரதம் நல்ல விதமாக முடிந்திருக்கிறது.  லோக் பால் வராமல் தடுக்க,   ஏகப்பட்ட நோ பால்களை (முட்டுக்கட்டைகளை) போட்டுப்பார்த்துவிட்டு முடியாமல் ஒருவழியாக அரைமனதாக கோரிக்கைளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். லோக்பால் குழந்தையை ஆரோக்கியமாக  பிரசவிக்கவிடுவார்களா? பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
அன்னா  ஹாசாரே பற்றி ஆளாளுக்கு ஏதோதோ சொன்னார்கள். “பாராளுமன்றத்துக்கு எதிராக ஒரு தனிமனிதரா?, “ஊழல்வாதி “அமெரிக்க பின்னணி என்றெல்லாம்!.  அணுசக்தி உடன்பாடு, சிலர் வெற்றிபெற்ற  ரகசியம், சிலர்  பதவிக்கு வந்த ரகசியம் இவற்றிலெல்லாம் நமக்கு மேலிருக்கும் சரவ வல்லமை படைத்த அந்த நாட்டாமை?யின் பின்னணி இருப்பதாக பரவலாக தெரியும்! ஆனால் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றத் தயங்கியத்தின் உண்மையான காரணம் “நமக்குதான் குழி தோண்டுகிறார்கள்என்பதை சிலர் உணர்ந்ததால்!. =============================================================================


அட போங்கப்பா!
சன் செய்தியில் பிளாஷ் நியூஸ்: இந்தியா பொருளாதாரத்தில் உலக அளவில் முதல் இடத்தை பிடித்தது. 
மத்திய அரசு அறிவிப்பு: ஒரு மாவட்டத்திற்கு ரூ.60,000 கோடி வீதமும்  ஒரு கிராமத்திற்கு 100 கோடி வீதமும் நலதிட்டத்திர்க்கு ஓதிக்கீடு.
அடுத்த 20 வருடங்களுக்கு வரிகட்ட வேண்டாம், பெட்ரோல் 25  ரூபாய்,  டீசல்  15 ரூபாய் , 
OXFORD மாதிரி யுனிவர்சிட்டி 1500, அனைத்து வசதிகளுடன் 2500 இலவச மருத்துவமனைகள், 28000 கி.மீ –க்கு ரப்பர் ரோடு, 95 கோடி மக்களுக்கு இலவச வீடுகள்.    
இன்று EB காரங்க வந்து மீட்டரை கழற்றி சென்றார்கள். இனி பில் கட்ட வேண்டாமாம்,
ஏழு தலை முறைக்கு சந்தோசமா இருக்கலாங்க என்றாள் என் மனைவி.
“எத்தனை தலைமுறைக்கு? என்றேன். முதுகில் தட்டினால்
எதிரில் மனைவி
அய்யோ மணி ஏழாச்சி எந்திரிங்க, இன்னுமா தூக்கம் என்றாள்.
இரவு ஒரு நண்பர் ஒரு குறுஞ்செய்தி  அனுப்பியிருந்தார். வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவந்தால் மேற்கண்டவைகள் எல்லாம் இந்தியாவில் நடத்தலாமாம். அதை படித்துவிட்டு அப்படியே தூங்கி போனேன்.
நல்லாத்தான் கனவு வருது!
=============================================================================
அரவான்
வசந்த பாலனின் “அரவான் படத்தின் ஸ்டில்கள் மிரட்டலாக இருக்கின்றன. படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றன. விகடனில் ஒரு 50  மார்க்கை தட்டிச்செல்லும் என்று எதிர்பார்கிறேன்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!.
 







===================================================================
காஞ்சனா

லாகவா லாரன்சின் படத்தை சொல்ல வரவில்லை! 
           இந்த காஞ்சனா சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர். தமிழகத்தின் முதல் பெண் நடத்துனர்.   25 வருடங்களுக்கு முன்பு. அப்போது விகடன், குமுதம் இவற்றில் இவரை பாராட்டி கட்டுரை வந்துள்ளது.  அந்த கால பி.யு. சி.   தனது 1 வருட கைக்குழந்தை நோயில் இறந்த பொழுது கூட நினைக்கவில்லை இந்த சோகம் தொடரும் என்று! அடுத்த ஒரு வருடத்தில் கணவனும் இதய நோயில் மரணம். 

              அடுத்த ஒருசில வருடங்களில் தனக்கிருந்த ஒரே ஆதரவான அப்பாவும் இரக்க நிலை குலையாமல், ஒரு தனியார் நடத்திய மகளிர் பேருந்தில் ஆண்களுக்கு சமமாக நடத்துனராக பணியாற்றினார்!  

                 தன் தங்கை மகளை தன் மகளாக வளர்த்து திருமணம் செய்து வைத்தார்!  அவர்களுக்கு பிறந்த இரண்டு மகன்களையும் தாமே வளர்த்தார்!   சென்ற வருடம் குடும்ப தகராறில் வளர்த்த மகள் தான் வளர்த்த தாயை மறந்து பெற்ற தாயிடம் சென்று விட,   தான் திருமணம் செய்து வைத்த தன் மருமகனுக்கு மறுமணம் முடிக்க எண்ணி பக்கத்துக்கு ஊருக்கு பேருந்தில் பெண் பார்க்க சென்றார்!

                 எதிரே எமனாக வந்த மணல் லாரி மோதி,  முன்புறம் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே விழுந்து பலியானார்!

                       காஞ்சனா எனக்கு அக்கா முறை!! 
===================================================================
என்னமா தீர்ப்பு சொல்றாங்க!
போர் குற்றம் குறித்து இலங்கையே விசாரிக்கும் –மந்திரி கிருஷ்ணா திட்ட வட்டம்.
“ஆர்டர்.....ஆர்டர்...  ஆகவே கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகிய குற்றங்கள் பற்றி, குற்றம் சாட்டப்பட்டுள்ள  இவரே  தன்னை விசாரித்து தீர்ப்பளித்துக்கொள்வார் என்று இதன் மூலம் தீர்ப்பளிக்கிறேன்!.
                                                      ********************
அறிவிக்கப்பட்டது:  பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை, ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும்!
 அறிவிக்கப்படாதது: அவைகள் அம்மா படம் போட்டு  பச்சை கலரில் இருக்கும்!
===================================================================
புதிய தலைமுறை செய்திகள்!
தமிழில் ஒரு நடுநிலையான செய்தி சேனல் இல்லை என்று செய்திகள் வாசிப்பது பதிப்பில் ஆதங்கப்பட்டிருந்தேன்!  இப்போது "புதிய தலைமுறை" ஒரு புதிய வரவாக கொஞ்சம் மாறுபட்டு தெரிகிறது!  உண்மை உடனுக்குடன்  என்ற அறிவிப்புடன் வந்திருக்கிறது.   ஆரம்பம் ஆகையால் இப்போதைக்கு நிறை குறைகளை அலச முடியாது.  நன்றாக செய்வார்கள் போல் தோன்றுகிறது.  பொறுத்திருந்து பார்ப்போம்!
சாதிக்க வாழ்த்துக்கள்!  
===================================================================
இரண்டாவது தண்டனை!

சந்தன், முருகன்,பேரறிவாளன் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் பலவகைகளிலும் போராட்டம் வலுத்துவரும் நிலையில், செங்கொடி என்ற போர்க்குணமிக்க பெண் உயிர் நீத்துள்ளார்.  அவரின் உணர்வுகளை மதிக்கும் அதே நேரத்தில், உயிர் நீத்தல் சரியான முடிவல்ல.   உண்ணாவிரதம் இருந்து போராடி வெற்றி பெற்ற அன்னாவின் போராட்ட முடிவு  ஜனநாயக போராட்டதின் வலிமையை நிருபித்துள்ளது.   இந்த வழக்கில் அவிழ்க்கப்படாத பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன!  

      இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கு 8 வாரங்கள்  தடைவிதித்துள்ளது.  ஒரு கருணை மனுவை பரிசீலிக்க 10 
வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது தேவையற்ற காலதாமதம் என்று 
வாதிடப்பட்டுள்ளது.   தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கவலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது  
ஆகியவை வரவேரகக்கூடிய நிகழ்வுகள்!
===================================================================
இந்த ப்ளெக்ஸ் பானரை படித்துவிட்டு யாரும் தீக்குளிக்கும் முடிவுக்கு இறங்க வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்!


===================================================================
முடிவாக..............

        என்னத்தை சொல்வது? இந்த பாடலை மட்டும் இப்போதைக்கு கேளுங்களேன்!


==================================================================

No comments:

Post a Comment