Nov 10, 2011

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்...!


இன்றைய தமிழக முதல்வரின் சில துக்ளத்தனமான அதிரடி அறிவிப்புகளை 
பார்க்கும் பொழுது எதிர்க்கட்சி தலைவர் மேல் வெறுப்பு இருக்க வேண்டியதுதான்! அதற்காக அவர்கள் கொண்டு வந்த சில நல்ல விஷயங்களை இப்படியா கண்மூடிதானமாக மாற்றுவது என்ற ஆதங்கம் சாமான்ய மக்களிடம் ஏற்பட்டிருப்பது இயல்பு.  அநேகமாக முதல்வருக்கு சருக்கப்போகும் இரண்டாவது தவறான முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்! 

         சமீபத்தில் படித்து ரசித்த ஆதவன் தீட்சண்யாவின் கவிதை!


  காலுக்கு தொப்பியும், தலைக்கு செருப்பும் அணியுமாறு
  இந்த நிமிடம் வரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை!

  கண்ணிருக்கும் இடத்தில் கண்ணும், 
  காதிருக்கும் இடத்தில காதுமே இருந்துவிட்டு போகட்டுமென்று 
  மாட்சிமை தங்கிய அரசு 
  குடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது கருணையுடன்...

  தொடர்ந்தும் வாய்வழியாகவே உண்பதை மாற்றுவது குறித்து 
  இன்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்.

  ஒரு மாறுதளுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும்
  மூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம் 
  நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.

  உலகிலேயே முதன் முறையாக 
  தண்டவாளத்தில் பேருந்து,  தார் ரோட்டில் ரயில் 
  துறைமுகத்தில் விமானம், விமான நிலையத்தில் கப்பல் என்று,
  அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு 
  குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

  பிரசவ ஆஸ்பத்திரியை சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு
  நாட்டையே சுடுகாடாக மாற்றும் திட்டம் படிப்படியாக நிறைவேறும்.

  கோன் எவ்வாறோ குடிமக்களும் அவ்வாறேயானபடியால் 
  அவர்களும்
  எதையும் எப்போதும்
  ஒரே இடத்தில் நீடித்திருக்க விடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
===================================================================

வாளமீன் இருக்கு வஞ்சிரம் மீன் இருக்கு..............!

கனிமொழிக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.  அதற்க்கு நீதிபதி சொன்ன ஒரு காரணம்,  “இப்படி மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஜாமீன வழங்கினால், பலர் இது மாதிரியான தவறுகளை செய்வதனால் எளிதில் ஜாமீனில் வந்துவிடலாம் என்ற மனப்பான்மை வந்துவிடும். என்று கூறியிருக்கிறார்.    பல தில்லாலங்கடிகள் ஜாமீனில் வெளியில் வந்தாலே நிரபராதிகள் என்ற நினைப்பில் வெளியில் இருக்கிறார்கள்!. அவர்களுக்கு தெரியும் நமது சட்ட அமைப்பு எப்படி பட்டது என்று.  பல வழக்குகளின் தீர்ப்பு, குற்றவாளிகளின் இயற்கை மறைவுக்கு பின்பே வந்துள்ளது!
அதெல்லாம் சரி,  தான் குற்றமற்றவர் என்றும், சிலருக்காக தான் இந்த தண்டனையை அனுபவிப்பதாகவும் கனிமொழி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்!. அந்த சிலரை மக்களுக்கு அடையாளம் காட்டாமல்   பழியை ஏற்றுக்கொண்ட உங்கள் தியாகத்தை(!) எண்ணி சட்டமும் மக்களும் ஆதங்கப்படுவார்கள் என்று நினைக்கிறாரா?
=============================================================================


கார் வாங்கலாம் என்ற நடுத்தரவர்க்கத்தினர் பலரது கனவில் மீண்டும் மண்ணை அள்ளி போட்டுவிட்டன பெட்ரோலிய நிறுவனங்கள்,  நமக்கெல்லாம் சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது.  பந்தாவுக்கு வாங்கிவிட்டு கஷ்டப்படுவது யார்?.  பெட்ரோல் டீசல் விலைகளின் கிராப் ஏறுமுகமாகவே இருக்கிறது.   இந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 8-வது தடவையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ந் தேதி 3 ரூபாய் 1 காசும், ஏப்ரல் 1-ந் தேதி 54 காசுகளும், ஜுன் 26-ந் தேதி 3 ரூபாய் 79 காசுகளும், செப்டம்பர் 8-ந் தேதி 10 காசுகளும், செப்டம்பர் 29-ந் தேதி 29 காசுகளும், அக்டோபர் 15-ந் தேதி 78 காசுகளும், நவம்பர் 8-ந் தேதி 35 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று 3 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது.  எனவே, இந்த ஆண்டில், 8 தவணைகளாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 86 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உயர வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்கும் பொழுது மட்டும் கச்சா எண்ணை விலை சர்வதேச சந்தையில் உயர்ந்தாலும் இவர்கள் உயர்த்த மாட்டார்கள். அப்போது மட்டும் மக்கள் மீது பரிவு வரும்.
======================================================

இந்த விளையாட்ட இதோட நிறுத்திக்குவோம்! இந்த கோட்ட.....

வடிவேலு என்ன செய்கிறார்!  தன் தவறை அவர் கண்டிப்பாக மனதளவில் உணர்ந்திருப்பார்! (முன்பு மனோகரம்மா போல்) நல்ல நகைச்சுவை நடிகர். அவரின் ஜனரஞ்சக ரீதியான காமெடிக்கு சிரிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சினிமா துறையினர் அவரின் நடிப்பு திறமையின் மீது மட்டும் மதிப்புகொண்டு அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முன் வரவேண்டும்.
அரசியலில் நீச்சலடித்து மூச்சு திணறியவர்களில் இவர் சமீப உதாரணம்.
"கைப்புள்ளைய கைவிட்ராதீங்க"
=============================================================================
அன்பே சிவம்!
சமீபத்திய ஒரு சிறிய சந்தோசம், எங்கள் வீட்டு வாசல்  நிலையின் மீது ஒரு சிட்டுகுருவி ஜோடி கூடு கட்டி மூன்று குஞ்சு பொரித்துள்ளது .  அந்த இடத்தில் இதற்க்கு முன்பு ஒருமுறை முட்டையிட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ குஞ்சு பொரிக்கவில்லை. இம்முறை குஞ்சுகள் பறக்கும் தருவாய்க்கு வந்துவிட்டது. தினமும் தண்ணீரும், கொஞ்சம் தினையும் வைப்பதில் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது. மானாமதுரையில் தோழர் சேர்முகபாண்டியன் அவர்களுடன் பணியாற்றிய காலங்களில், அவர் தினமும் மதியம் சாப்பிடுவதற்கு முன்பு காக்கைகளுக்கு தான் கொண்டு வந்த சாப்பாட்டில் கொஞ்சம் வைத்துவிட்டுத்தான் சாப்பிடுவார். அந்த காக்கைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முற்றத்தில் குறிப்பிட்ட இடத்தில வந்து காத்திருக்கும்.  அவர் விடுமுறையில் சென்றால் கூட சாதம் வைக்கும் அந்த பெரும் பணியை யாரிடமாவது ஒப்படைப்பார்.  அதில் அவருக்கு ஒரு அலாதியான் மகிழ்ச்சி. "காக்கை குருவிகள் எங்கள் ஜாதி" என்ற பாரதியின் வரிகளை படித்து வழிநடப்பவர். அதைப்பார்த்து எனக்கும் இந்த பறவைகள் மேல் கொஞ்சம் அன்பு ஏற்பட்டிருக்கிறது. அன்பே சிவம்.
=============================================================================
 இரண்டு வலைபூக்கள் - அறிமுகம்
1. உடல் நலம்  
நண்பர் சிவகங்கை அணு முத்துக்கிருஷ்ணன் அவர்கள் அஞ்சல் அட்டையில்  அணு என்ற பெயரில் பத்திரிக்கை  நடத்தி சாதனை படைத்து வருகிறார்.(பார்க்க: http://oorulagam.blogspot.com/2010/12/blog-post_09.html )  அவரின் அடுத்த முயற்சியாக http://www.anupostcardmagazine.blogspot.com/ ஏராளமான மருத்துவ விசயங்களை பதிவுசெய்துள்ளார்.  அனைவரும் பின்பற்றக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்!. மிகவும் உபயோகமாக இருக்கும்!.  ஒருமுறை சென்றுபாருங்கள்.
2. உண்மையான ஆன்மீகவாதிகளுக்கு....! 
நண்பர் பத்ரியின் அம்மா http://www.aanmeegavisayangal.blogspot.com/ என்ற பெயரில் சமீபத்தில் ஒரு ப்ளாக்-ஐ துவங்கி அதில் ஆன்மிக விசயங்களை எழுதுகிறார்கள்.  இந்த வயதில் அவரின் முயற்சி பாராட்டுக்குரியது. அதில் அவர் வரைந்த சில ஓவியங்களை பதிவிட்டுள்ளார்!  வியப்பாக இருக்கிறது. 
=============================================================================
ஒரு விழிப்புணர்வு படம்:
அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையில் செய்யப்படும் மோசடிகளை அம்பலப்படுத்தும் ஓர் வீடியோ படம்.  ஒரு தண்ணீர் பாட்டிலுக்கு பின்னால் இவ்வளவு மோசடிகள் இருக்கிறதா? என்ற வியப்பை ஏற்படுத்துகிறது. பாதுகாக்கப்பட்ட குழாய் தண்ணீரே நல்லது என்கிறார்கள்.
===================================================================

குறும் படம் - பெரும் மகிழ்ச்சி!


சமீப ஆண்டுகளில் குறும்படம் என சொல்லப்படும் சுமார் 15 அல்லது 20  நிமிடங்கள் ஓடக்கூடிய படங்கள் இளைஞர்கிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு சம்பவத்தையோ கதையையோ சொல்லி, அதிலும் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், போன்ற  டெக்னாலஜி விசயங்களை திரைப்படத்திற்கு நிகராக புகுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள்!  இவர்கள் குறும்படம் இயக்கி தயாரிப்பதில் லாப நோக்கம் இன்றி குறைவான செலவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஆத்ம திருப்பதி காண்கிறார்கள். (கதை, கவிதை எழுதுவது போல்)
         கலைஞர் டிவியில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி, திரைத்துறைக்கு வர ஆர்வமுள்ள திறைமையான இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்நிகழ்ச்சியில் சாதித்தவர்களுக்கு future film வாய்ப்புகள் வந்துள்ளன.    திறமையானவர்களை வரவேற்க தமிழ் திரைப்பட ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
===================================================================
தூக்கம் கண்களை தழுவட்டுமே!


இரவு 10 மணிக்கு மேல் படுத்துக்கொண்டு வானொலியை திருகினால் 
 இன்றும் ஏதாவது ஒரு அலைவரிசையில் இந்த பாடலை கேட்டு அப்படியே தூங்கிபோகலாம்.  நான் சிறுவனாக இருந்தபொழுது என்னை பெரும்பாலனா நாட்கள் தாலாட்டி தூங்க வைக்கும் ஜானகி பாடிய கண்ணதாசன் பாடல் இது.  நீங்களும் டிவி இல்லாத அந்த காலத்தில் இந்த சுகத்தை அனுபவித்து இருப்பீர்கள்!



படம்: ஆலயமணி
இசை : T.K.ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : s.ஜானகி 

3 comments:

  1. Dear sir, Wow. Really interesting to Read. Especially the story of birds is touching one. I came to know that Still there are some birds coming to a particular place at the right time in Tirukalukundram. Both the video i heard (about water and tamil song) in my mobile. They are very clear. Good upload. Yes. The Water we are receiving in the old method is very good than the the packed water. We must make hot the river water and drink. It is really true within some years, the air we breathe may be come for trading. I like the song Thookaumum kandgalai thaluvattume.

    Please post frequently . we like your writing.

    Venkat. www.hellovenki.blogspot.com

    ReplyDelete
  2. Your posting has been thought-provoking . Please write at least once in a week on important happenings that affect the society as a whole .
    P.Sermuga Pandian

    ReplyDelete
  3. The article was very interesting Continue your work

    ReplyDelete