Dec 5, 2011

ஏன் இந்த கொலை வெறி?

"why this கொலைவெறி" பாடல் மொழி கடந்து நாடு கடந்து வெறித்தனமாக ஹிட் ஆகிவிட்டது.   இதை தனுஷ் உட்பட அதை உருவாக்கிய டீமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் இந்த பாடலில் இம்ப்ரெஸ் ஆகி தன மகனை பாட வைத்திருக்கிறார்!   சுட்டி பாட்டு  இனிமை!  


***************************************************************************************
சில வாரங்களுக்கு முன்பு  பெய்த மழை தமிழகத்தை குறிப்பாக கடலோர மாவட்டங்களை உண்டு இல்லை என ஆக்கிவிட்டது.   விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தாலும், ஆங்காங்கே பாதிப்புகளும் சற்றே அதிகம்.
ஏரிகள், கண்மாய்கள் நிரம்பி காண கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.  இப்படி கொட்டிய சென்ற வார மழை நாளில் நான் நன்றாக நனைந்து விட்டேன்.   பக்கத்தில் இருந்தவர் நனையவில்லை.  கையில் குடை இருந்ததது.  பிறகு என்ன குடை பிடிக்க வேண்டியது தானே என்கிறீர்களா?  பேருந்தில் குடை பிடித்தால் பக்கத்தில் இருப்பவருக்கு இடிக்காதா? அதனால் குடை பிடிக்கவில்லை.   சரி பேருந்து கட்டணங்களை எற்றிவிட்டார்களே இந்த ஓட்டை உடைசல் பேருந்துகளை கொஞ்சம் சரி பண்ணுங்கள் இல்லையேல் எடைக்கு போடுங்களேன்!

பேருந்து கட்டண  உயர்வு என்றவுடன் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது.
குறைவான கட்டணம் நீண்ட நாட்களாக வாங்கியதால் போக்குவரத்து துறைக்கு பேரிழப்பு என்று சொல்கிறார்களே,  இந்த தனியார் பேருந்துகளும் அதே கட்டணத்தை தானே இவ்வளவு நாட்களும் வாங்கிகொண்டிருந்தார்கள்!   
அவர்களும் நட்டத்தில்தான் வண்டி ஒட்டிக்கொண்டிருந்தார்களா?

                       கட்டணத்த ஏத்துங்க வேண்டாம்னு சொல்லல கொஞ்சமா ஏத்துங்க? 
  சில்லறை வியாபாரத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற முடிவை தற்காலிகமாகத்தான் தள்ளிவைத்துள்ளதாக காங்கிரஸ் அரசு சொல்கிறது. காங்கிரசை தவிர கிட்ட தட்ட அனைவரும் எதிர்க்கும் நிலையில மன்மோகன் அரசு இடைதரகர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாக்க இதை அனுமதிப்பது அவசியம் என்கிறது.  விவசாயிகளின் மேல் இருக்கும் அக்கறையை(!) பாராட்டுவோம். அதே நேரத்தில் 5 கோடி பேருக்குமேல் வேலை அளிக்கும்  இந்த சில்லறை வியாபாரிகளை இடைத்தரகர்கள் என்று கொச்சைப்படுத்துவது நியாயமாக தெரியவில்லை,  சரி, அப்படியே விவசாயிகளை வாழவைக்க வருபவர்களாக சொல்லப்படும், வால்மார்ட் உட்பட்ட அந்நிய முதலைகளை சாரி முதலாளிகளை அனுமதிப்பதாக வைத்துகொள்வோம் ஆரம்பத்தில் விவசாயிகளிடம் அதிகவிலைக்கு விலைக்கு  பொருட்களை வாங்கி மக்களுக்கு குறைந்த  விலைக்கு விற்று,  இந்தியாவின் அனைத்து சில்லறை வியாபாரிகளையும் ஓய்த்தபிறகு விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு விற்க வைத்து பொது ஜனங்களை அதிக விலைக்கு வாங்க வைக்கும் நெருக்கடியை ஏற்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?.  இந்த திட்டம் வந்தால் ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.  ஏன் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.  முதலில் அங்கிருப்பவர்களுக்கு இந்த அந்நிய நிறுவனங்கள் வேலை கொடுக்கட்டும்.
ஒரு நாட்டை அடிமை படுத்துவதற்கு வியாபாரம் ஒரு வழி என்பது வரலாறு.  அது இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் இருக்கலாம்.   சுதந்திரதிர்க்காக போராடிய கட்சியின் வழி வந்தவர்களுக்குமா தெரியவில்லை?  
========================================================================
             கிழக்கு உத்தரபிரதேஷில் ஹக்குல் என்பவர் தனக்கு அரசு ஒதுக்கிய நிலத்தை கொடுப்பதற்கு தன்னிடம் லஞ்சம் எதிர்பார்த்த அரசு அலுவலர்களுக்கு பாடம் கர்ப்பிப்பதர்க்காக அந்த அலுவலகத்திற்குள் பாம்புகளை கொண்டுவந்து விட்டார்.

                  முதலைகள் பாம்புகளுக்கு அஞ்சாது என்பது அவருக்கு தெரியுமா?
 
==================================================================
புதிய தலைமுறை சேனல் முதலிடம்

            புதிய தலைமுறை செய்தி சேனல் துவக்கப்பட்ட சமயத்தில்  தரம் நன்றாக இருப்பதாகவும் எதிபார்கலாம்  என்றும்  முன்பு பதிவிட்டிருந்தேன்.
(சொடுக்க:  http://oorulagam.blogspot.com/2011/08/blog-post_30.html#more) எதிர்பார்த்தது போல் புதிய தலைமுறை சேனல் ஆரம்பித்து அறுபது நாட்களுக்குள் ஏ.சி. நீல்சன் எடுத்த கருத்து கணிப்பில் மொத்த ஜி.ஆர்.பியில் 35.94 புள்ளியை பெற்றிருப்பது  பாராட்டுக்குரியது.   சன் செய்திகள் 31.24 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திலேயும், மூன்றாவது இடத்தில் கலைஞர் செய்திகளும், நான்காவது இடத்தில் ராஜ் நியூஸும், ஐந்தாவது இடத்தில் என்.டி.டிவி ஹிண்டு இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் பின்னால் தான் ஜெயா செய்திகள்.  புதிய தலைமுறையின் நடுநிலை மற்றும் தரம்  தொடரவேண்டும்.

No comments:

Post a Comment