எனது கம்ப்யூட்டரில் (windows 7) 5.1 Creative audio system செயல் படவில்லை. இது சம்பந்தமாக இணையத்தில் தேடியதில் ஒரு தெளிவான பதில் கிடைக்கவில்லை. எனவே பலவகைகளில் முயற்சி செய்து கடைசியாக சரியான வழிமுறையை கண்டுபிடித்தேன். Answers.Microsoft.com லும் reply செய்துள்ளேன் http://answers.microsoft.com/en-us/windows/forum/windows_7-hardware/51-surround-sound-speaker-system-not-working-in/908211ce-de7a-4246-be9f-f26ae27c8201?page=3&msgId=24b0dd73-69b2-4d29-9be6-c46d06b6f724 இது தங்களுக்கும் எப்பொழுதாவது உதவும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.
Aug 19, 2012
5.1 Speaker system Configuration in Windows 7
பாரதியின் புதிய ஆத்திசூடி
அச்சம் தவிர்ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்த லொழி
ஒளடதங் குறை
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளை பல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலுந் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்துநில்
கோல்கைக் கொண்டு வாழ்
கௌவ்வியதை விடேல்
சரித்திரத் தேர்ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு சுமையினுக்கு இளத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேலுல்
சைகையிற் பொருளுணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தனையிகழ்
சௌரியந் தவறேல்
ஞமலிபோல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வது அருளின்
ஞேயங் காத்தல்செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்றுணர்
தேசத்தைக் காத்தல் செய்
தையலை உயர்வு செய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாளெலாம் வினைசெய்
நினைப்படு முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்
பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்மை இகழ்
போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்து கொள்
முனயிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொடேல்
மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புறத் தவஞ்சொய்
மோனம் போற்று
மௌட்டியந் தனக்கொல்
யவனர்போல் முயற்சி கொள்
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
ரஸத்திலே தோர்ச்சி கொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசிபல வென்றுணர்
ரூபஸ் செம்மைசெய்
ரேகையில் கனிகொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சிசெய்
லீலை இவ்வுலகு
உறுத்தரை இகழ்
உலோக நூல் கற்றுணர்
லௌகிகம் ஆற்று
வருவதை மகிழ்ந்துண்
வானநூற் பயிற்சிகொள்
விதையினைத் தெரிந்திடு
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வெளவுதல் நீக்கு
Feb 29, 2012
தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!
அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.
இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.
Feb 27, 2012
சுஜாதா ஒரு தீர்கதரிசியும் கூட!
(27.2.2012) சுஜாதாவின் நான்காவது நினைவு நாள். சுஜாதா எழுதாதது எதுவும் இல்லை! இலக்கியம், கதை, கவிதை, கட்டுரை, அறிவியல் விசயங்கள் என எதையும் விட்டுவைக்கவில்லை. இன்று அவர் தனது "கற்றதும் பெற்றதும்" கட்டுரை தொகுப்பில் 2010 எப்படி இருக்கும் என்று கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்! அவற்றில் பல உணமையாகி இருக்கின்றன.
2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.
Jan 24, 2012
சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்! ...இன்றைய இளைஞர்களுக்கு!
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று.... உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
குளிர்காலத்துக்கு ஏற்ற காய்கள், பழங்கள், கீரைகள்!
சீசனுக்கு ஏற்ற காய்கறி...கள், பழங்கள் உட்கொள்வது உடலுக்கு ஊட்டம் தரும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பனிக்காலத்தில் இந்த காய்கறிகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.
அதிரடி ஆரஞ்சு
சிட்ரஸ் அமிலச்சத்து நிறைந்த பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது. இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்தது. இதில் உள்ள பொட்டாசியம், போலேட், தாது உப்புகள், நார்ச்சத்து உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது.
ஊட்டம் தரும் ஆப்பிள்
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவையில்லை என்பார்கள். அந்த அளவிற்கு பனிக்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது பயன்தரக்கூடியது. நொறுக்குத் தீனிக்கு பதிலாக ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு உற்சாகம் தரும்.
அதிரடி ஆரஞ்சு
சிட்ரஸ் அமிலச்சத்து நிறைந்த பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது. இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்தது. இதில் உள்ள பொட்டாசியம், போலேட், தாது உப்புகள், நார்ச்சத்து உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது.
ஊட்டம் தரும் ஆப்பிள்
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவையில்லை என்பார்கள். அந்த அளவிற்கு பனிக்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது பயன்தரக்கூடியது. நொறுக்குத் தீனிக்கு பதிலாக ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு உற்சாகம் தரும்.
Jan 8, 2012
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா?
தனுஷின் கொலைவெறி பாடல் இந்தியா தாண்டி ஜப்பானிலும் வெறித்தனமாக பாடிக்கொண்டிருப்பதாக தகவல். இந்த பாடல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு உணமையான காரணம் தனுஷா அல்லது இந்த பாடலின் இசை அமைப்பாளர் அனிருத்தா என்பது தவிர்க்கப்பட்ட கேள்வி!
இந்த பாடலை பலரும் பலவகைகளிலும் ரீமேக் செய்யப்பட்டாலும், தமிழ் மேல் ஒரு உண்மையான பற்று கொண்டு இலங்கை யாழ் நகரத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் இந்த பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பாடலை இயற்றி, பாடி இசையமைத்தவர் எஸ்.ஜெ.ஸ்டாலின். இந்த பாடல் இந்த நிமிடம் வரை 1 லட்சத்து 67 ஆயிரம் ஹிட்களை பெற்று பாராட்டுகளை குவித்துக்கொண்டிருக்கிறது!
Jan 5, 2012
தண்ணீர் (water for health)
உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல்நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம்.
ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட உடலை மேம்படுத்தவும் தண்ணீர் நல்ல சிகிச்சையாக உள்ளது என்றால் அது மிகையாகாது. உடல் இளைப்பது, எய்ட்ஸ் பாதித்தவர்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது என்றால் அது தண்ணீர் சிகிச்சைதான்.
தண்ணீர் சிகிச்சை என்றால் ஏதோ புதிய சிகிச்சை முறை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதுதான் தண்ணீர் சிகிச்சையாகும்.
Dec 25, 2011
வெங்காயம்!
சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!
* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்ஸ அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
Dec 5, 2011
ஏன் இந்த கொலை வெறி?
"why this கொலைவெறி" பாடல் மொழி கடந்து நாடு கடந்து வெறித்தனமாக ஹிட் ஆகிவிட்டது. இதை தனுஷ் உட்பட அதை உருவாக்கிய டீமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் இந்த பாடலில் இம்ப்ரெஸ் ஆகி தன மகனை பாட வைத்திருக்கிறார்! சுட்டி பாட்டு இனிமை!
***************************************************************************************
சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழை தமிழகத்தை குறிப்பாக கடலோர மாவட்டங்களை உண்டு இல்லை என ஆக்கிவிட்டது. விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தாலும், ஆங்காங்கே பாதிப்புகளும் சற்றே அதிகம்.
ஏரிகள், கண்மாய்கள் நிரம்பி காண கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. இப்படி கொட்டிய சென்ற வார மழை நாளில் நான் நன்றாக நனைந்து விட்டேன். பக்கத்தில் இருந்தவர் நனையவில்லை. கையில் குடை இருந்ததது. பிறகு என்ன குடை பிடிக்க வேண்டியது தானே என்கிறீர்களா? பேருந்தில் குடை பிடித்தால் பக்கத்தில் இருப்பவருக்கு இடிக்காதா? அதனால் குடை பிடிக்கவில்லை. சரி பேருந்து கட்டணங்களை எற்றிவிட்டார்களே இந்த ஓட்டை உடைசல் பேருந்துகளை கொஞ்சம் சரி பண்ணுங்கள் இல்லையேல் எடைக்கு போடுங்களேன்!
பேருந்து கட்டண உயர்வு என்றவுடன் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது.
குறைவான கட்டணம் நீண்ட நாட்களாக வாங்கியதால் போக்குவரத்து துறைக்கு பேரிழப்பு என்று சொல்கிறார்களே, இந்த தனியார் பேருந்துகளும் அதே கட்டணத்தை தானே இவ்வளவு நாட்களும் வாங்கிகொண்டிருந்தார்கள்!
அவர்களும் நட்டத்தில்தான் வண்டி ஒட்டிக்கொண்டிருந்தார்களா?
கட்டணத்த ஏத்துங்க வேண்டாம்னு சொல்லல கொஞ்சமா ஏத்துங்க?
Nov 10, 2011
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்...!
இன்றைய தமிழக முதல்வரின் சில துக்ளத்தனமான அதிரடி அறிவிப்புகளை
பார்க்கும் பொழுது எதிர்க்கட்சி தலைவர் மேல் வெறுப்பு இருக்க வேண்டியதுதான்! அதற்காக அவர்கள் கொண்டு வந்த சில நல்ல விஷயங்களை இப்படியா கண்மூடிதானமாக மாற்றுவது என்ற ஆதங்கம் சாமான்ய மக்களிடம் ஏற்பட்டிருப்பது இயல்பு. அநேகமாக முதல்வருக்கு சருக்கப்போகும் இரண்டாவது தவறான முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்!
சமீபத்தில் படித்து ரசித்த ஆதவன் தீட்சண்யாவின் கவிதை!
Nov 6, 2011
உடல் எடையை குறைக்க!
காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.
நம் அன்றாட வேலைகளை செய்யவும், உடல் உறுப்புகள் இயங்கவும், நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும் போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது. இவ்வாறு, இந்த சேமிப்பு, ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும் போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம். மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் திகரிக்கின்றன.
Sep 19, 2011
மனம் தளராத பெண் போராளி -இரும்பு மனுஷி- ஐரோம் சானு ஷர்மிளா ( Irom Chanu Sharmila)
கட்டுரை: P.S.P.பாண்டியன்
Armed Forces ( Special Powers) Act 1958 ( இராணுவத்தினருக்க்கான சிறப்பு அதிகாரத்திற்கான சட்டம் 1958) கலவரப் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட மணிப்பூர் , நாகாலந்து, மிசோரம் , மேகாலயா, திரிபுரா,அருணாசல பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் அமலில் இருந்து வருகிறது. இராணுவத்தினருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை இச்சட்டம் தந்துள்ளது. கேள்வி கேட்பாடே இல்லாமல் யாரையும் எப்போதும் கைது செய்ய்யலாம் . விசாரணைக்கு அழைத்து செல்லலாம். அவர்கள் திரும்பி வரலாம் வராமலும் போய்விடலாம். தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கப் போகிறோம் என்று சொல்லி அள்ளிச் செல்லப் பட்ட குறைந்த வயதுள்ள பெண்களும், ஆண்களும் திரும்பி வராவிட்டல் அவர்களது பெற்றோர் படும் துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ? மனித உரிமை மீறலுக்கு அப்பட்டமாக துணை போகும் கொடுஞ்சட்டம் அது.
Sep 15, 2011
போஸ்ட்மேன்
நவீனத்தின் பாதிப்பில் மறக்கடிக்கப்பட்ட உறவுகளை, உணர்வுகளை, இக்குறும்படத்தின் மூலம் அருமையாக காட்சிப்படுத்தியுள்ளார்கள்!
Sep 9, 2011
நெஞ்சுக்கு நீதி- குறும்படம்!
நாளைய இயக்குனர் வெற்றியாளர் நளனின் குறும்படம் படம்.
அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!
அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!
Subscribe to:
Posts (Atom)








