- தினமணி தலையங்கம்
இந்தியா சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் முடிந்து 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள். அந்நியரின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியா விடுதலைபெற்று மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சிமுறைக்கு வித்திட்ட நாள்.
இந்தியாவின் சுதந்திரத்துக்கு லட்சக்கணக்கான பேர் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்திருந்தாலும் இந்திய விடுதலையைத் தலைமை ஏற்று நடத்திய அண்ணல் காந்தியடிகளின் வழிகாட்டுதல்தான் இன்றைய இந்தியாவின் தோற்றத்துக்கு முக்கிய காரணியாக இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. உலகுக்கு அகிம்சை, சத்தியாகிரகம், பொதுவாழ்வில் தூய்மை, தனிமனித வாழ்வில் எளிமை என்று புதுப்பாதை வகுத்தவர் அண்ணல் காந்தியடிகள்.
உலகெல்லாம் உண்ணாவிரதத்தையும் சத்தியாகிரகத்தையும் உன்னதத் தீர்வாகப் பார்க்கும் வேளையில் இந்தியாவில் மட்டும்தான் உண்ணாவிரதத்துக்கும், சத்தியாகிரகப் போராட்டத்துக்கும் அரசால் மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது. அறவழிப் போராட்டம் அடக்குமுறையால் தடுக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் அகற்றப்படுகிறார்கள். நியாயம் கேட்க அண்ணல் காந்தியின் அறவழியில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் முடக்கப்படுகிறார்கள்.
சத்தியாகிரகப் போராட்டத்தின் மூலம் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சத்தியாகிரகப் போராட்டத்துக்குத் தடை என்பதில் வியப்பொன்றுமில்லை. ஏனென்றால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது மக்களின் நியாயமான கோரிக்கைகளை எதிர்ப்பாகப் பார்க்கும் தன்மையுடையதுதான் அரசாங்கம். ஆட்சியிலிருப்பது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கமா அல்லது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அரசா என்பது பொருட்டல்ல. அரியணையில் அமர்ந்தவுடன் கிரீடம் கனக்கிறது. தலைக்குப் பின்னே ஒளிவட்டம் தோன்றிவிடுகிறது. எதிர்ப்பவர்கள் அனைவரும் அரியணையைச் செல்லரிக்க வந்த கரையான்களாகத் தோன்றுகிறார்கள்.
அண்ணா ஹசாரே அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மத்திய அரசு ஏன் பயப்பட வேண்டும்? தில்லி போலீஸôர் ஏன் இத்தனை நிபந்தனைகளை விதித்து அதைத் தடை செய்ய முனைப்புக் காட்ட வேண்டும்?
முதலில் உண்ணாவிரதத்துக்கு இடம் தர மறுத்தார்கள். எந்த இடமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்ன பிறகு தற்போதைய இடத்தை போலீஸ்தான் பரிந்துரைத்தது. இப்போது அதே போலீஸ், ""அப்போது சொன்னோம், ஆனால், இது ஒரு நாள் நிகழ்ச்சிக்கு மட்டுமே சரியானதாக இருக்கும் என்பதால் இப்போது அனுமதி மறுக்கிறோம்'' என்கிறது.
உண்ணாவிரதத்தை ஆகஸ்ட் 16-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி 18-ம் தேதி மாலை 5 மணிக்கெல்லாம் முடித்துவிட வேண்டும் என்று காலவரம்பற்ற அண்ணா ஹசாரே குழுவினரின் போராட்டத்தை ஒரு வரம்புக்குள் கொண்டுவரப் பார்க்கிறது காவல்துறை. அதுமட்டுமல்ல, போராட்டத்தில் 5,000 பேருக்கு மேல் தொண்டர்கள் இருக்கக்கூடாது. 50 கார்கள் மட்டுமே அந்தப் பகுதியில் நிறுத்தலாம்.
எல்லாவற்றையும்விட வேடிக்கையான நிபந்தனை என்னவென்றால், சத்தியாகிரகம் இருப்பவர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுவார்கள் என்பதால் கம்பு, கத்தி போன்றவற்றைக் கொண்டுவரக்கூடாது என்பதுதான். கத்தி, கம்பு கொண்டு வருவோர் வன்முறையில் ஈடுபட்டு, அப்புறப்படுத்தும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி விடுவார்கள் என்று அச்சப்படுகிறது காவல்துறை.
வன்முறையில் நம்பிக்கை கொண்டிருந்தால், அண்ணா ஹசாரே போன்றோர் ஏன் உடலை வருத்திக்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போகிறார்கள். லண்டனில் தற்போது நடைபெறும் வன்முறைபோல, நேரடியாக அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கிவிடுவார்களே. கேவலம் ஓர் இடத்தையும் அனுமதியையும் பெற இத்தனை அல்லல்பட மாட்டார்களே.
அடுத்த நிபந்தனை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோரை ஒரு மருத்துவக் குழு தினமும் மூன்றுவேளை பரிசோதிக்கும். அக்குழு பரிந்துரைத்தால், அந்தத் தொண்டர் அல்லது தலைவர் உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஊசி மூலம் உணவு செலுத்தப்படுவார் என்பது. இதற்குக் காரணம், பந்தலில் யாராவது இறந்துபோனால், போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்கிற அச்சம்தான்.
வேடிக்கை என்னவென்றால், இந்தப் போராட்டம் மன்மோகன் சிங்கின் தலைமையிலான அரசு நீக்கப்பட வேண்டும் என்று கோரவில்லை. லஞ்சத்தைப் போக்குவதற்காகக் குரல் கொடுக்கும் அகிம்சை வழியிலான போராட்டம்தான் இது. அதற்கு மத்திய அரசு ஏன் பயப்பட வேண்டும்?
முன்பு யோகா குரு ராம்தேவின் உண்ணாவிரதப் பந்தலில் நுழைந்து அனைவரையும் தாக்கியது தில்லி மாநகரக் காவல்துறை. இதனால் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டவுடன் ராம்தேவ் மீதும், அவரது உதவியாளர் தவறான தகவல் தந்து பாஸ்போர்ட் பெற்றார் என்றும், ராம்தேவ் நிறுவனங்களுக்கு கோடிகோடியாய் சொத்து உள்ளது என்றும் அவர் மீதான மதிப்புக்குக் கேடு விளைவிக்கும் பிரசாரத்தில் இறங்கியது மத்திய அரசு.
இப்போதும் அதே உத்தியை மீண்டும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி, அண்ணா ஹசாரே தலைமையிலான அறக்கட்டளைகளில் நிதிமுறைகேடு குறித்து சாவந்த் கமிஷன் அளித்த அறிக்கையைச் சுட்டிக் காட்டி, ""முதலில் அதற்குப் பதில் சொல்லிவிட்டு உண்ணாவிரதம் நடத்துங்கள்'' என்கிறார்.
ஆனால் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி போன்ற பல நூறு கோடி ரூபாய் ஊழல்கள் குறித்து தலைமைத் தணிக்கைத் துறை அளித்துள்ள அறிக்கைக்குப் பதில் சொல்லிவிட்டுப் பிறகு அண்ணா ஹசாரேவின் மீதான அறிக்கை பற்றி விவாதிப்போமே, யார் வேண்டாம் என்றது.
அண்ணல் காந்தியடிகளின் அடியொற்றி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஆட்சி உண்ணாவிரதத்தையும், சத்தியாகிரகத்தையும் எதிர்க்கிறது. ஊழலைக் கட்டுப்படுத்த லோக்பால் அமைப்பை நிறுவத் தயங்குகிறது. வாழ்க இவர்களது காந்திய சிந்தனை.
""உங்களில் குற்றம் செய்யாதவர்கள் இந்தப் பெண் மீது கல்லெறியுங்கள்'' என்று இயேசுநாதர் சொன்னால், அது மெய்யான அன்பின் வெளிப்பாடு. ""உங்களில் குற்றம் செய்யாதவர்கள் என் மீது கல்லெறியுங்கள்'' என்று அந்தப் பெண்ணே சொல்வாளேயானால், அது சாத்தானின் கூப்பாடு

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தவேளையில் குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் இந்தியாவிலுள்ள அத்தனை அரசியல்வாதிகளும் மகாத்மா காந்தியைப் பற்றி வானளாவப் புகழப் போகிறார்கள். தீவிரவாதத்தை ஒழிக்கவும், உலகில் அமைதியை நிலைநாட்டவும் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை, சத்தியாகிரக வழிகள் மட்டுமே தீர்வு என்றும் உபதேசம் செய்யப் போகிறார்கள்.

No comments:
Post a Comment