கமல்+கிரேசி=காமெடி சரவெடி!
கமல்-கிரேசி மோகன் இணைந்தால் படம் முழுவதும் தாராளமாக ரசித்து சிரித்து, வீட்டுக்கு வந்தும் சிரிக்கலாம். குடும்பத்துடன் தியேட்டருக்கு நம்பி செல்லலாம். இந்த காமெடி கூட்டணி மீண்டும் இணைவதாக ஒரு செய்தி எனக்கு இப்போதே ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. படத்திற்கு தலைப்பு “நண்பர்களும் 40 திருடர்களும்” என்பது தகவல். கமல் தற்போது “விஸ்வருபம்” படவேளைகளில் இருக்கிறார். “மன்மதன் அம்பு” பார்த்து நொந்த மனங்களுக்கு விரைவில் ஆறுதல் தாங்க கமல் சார்.
=============================================================================
குற்றமுள்ள நெஞ்சு!
ஒரு வழியாக அன்னா ஹசாரேவின் உண்ணா விரதம் நல்ல விதமாக முடிந்திருக்கிறது. லோக் பால் வராமல் தடுக்க, ஏகப்பட்ட நோ பால்களை (முட்டுக்கட்டைகளை) போட்டுப்பார்த்துவிட்டு முடியாமல் ஒருவழியாக அரைமனதாக கோரிக்கைளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். லோக்பால் குழந்தையை ஆரோக்கியமாக பிரசவிக்கவிடுவார்களா? பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
அன்னா ஹாசாரே பற்றி ஆளாளுக்கு ஏதோதோ சொன்னார்கள். “பாராளுமன்றத்துக்கு எதிராக ஒரு தனிமனிதரா?”, “ஊழல்வாதி” “அமெரிக்க பின்னணி” என்றெல்லாம்!. அணுசக்தி உடன்பாடு, சிலர் வெற்றிபெற்ற ரகசியம், சிலர் பதவிக்கு வந்த ரகசியம் இவற்றிலெல்லாம் நமக்கு மேலிருக்கும் சரவ வல்லமை படைத்த அந்த நாட்டாமை?யின் பின்னணி இருப்பதாக பரவலாக தெரியும்! ஆனால் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றத் தயங்கியத்தின் உண்மையான காரணம் “நமக்குதான் குழி தோண்டுகிறார்கள்” என்பதை சிலர் உணர்ந்ததால்!. =============================================================================