Aug 31, 2012

காந்தியின் ஆன்மா அக்டோபர் 2-ல் சாந்தி அடையட்டும்!

                      BSNL இணைய இணைப்பு  வைத்துள்ளேன்.  கடந்த மூன்று மாதங்களாக  தொலைபேசி பில்லில்  One time charges என்ற பெயரில் சுமார் ரூ. 100 வீதம் கட்டணம் சேர்த்துள்ளார்கள்.  விவரத்தில் அந்த தொகை Hungma Music on Demand என்ற சர்விஸ் க்காக பிடித்துள்ளதாக இருந்தது.  இது சம்பந்தமாக காரைக்குடி BSNL அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டதற்க்கு "உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருப்பார்கள்.  நீங்கள் சம்மதித்து add on செய்திருப்பீர்கள்" என்றார்.  நான் இல்லை என்று மறுத்தபோது, "உங்கள் பிள்ளைகள் இதை செய்திருக்கலாம்" என்றார்.   அவர்களும் அப்படி செய்யவில்லை என்று உறுதிபட கூறிய பொழுதும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.  

                  சில நாட்கள் கழித்து இது சம்பந்தமாக இன்னொரு அதிகாரியிடம்   "தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தான் இந்த மாதிரி கோல்மால் வேலைகளை செய்யும் என்றால் பொதுத்துறை நிறுவனமான BSNL லுமா இப்படி" என்று காரமாக கேட்டபிறகு "இந்த மாதிரி add on சர்வீஸ்-களை தனியாருக்கு விட்டுவிட்டதாகவும் அவர்களே இப்படி சேர்த்திருக்கலாம்" என்றார்.   எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை.


                இது சம்பந்தமாக http://selfcare.sdc.bsnl.co.in  -இல் புகார் பதிவு செய்த பொழுதும் எவ்வித பதிலும் இல்லாமல் என்னுடைய புகாரை CLOSE செய்து விட்டார்கள்.    பிறகு பதிவுத் தபாலில் புகார் அனுப்பியதால் இந்த மாதம் வந்த கட்டண பில்லில் அந்த தொகை சேர்க்கப்படவில்லை.  ஆனால் நான் மூன்று மாதங்களாக கூடுதலாக கட்டிய தொகையை திருப்பிக்கேட்டு இன்னும் பதிலில்லை!

              அஞ்சல் துறையுடன் இணைந்திருந்து பிறகு பிரிந்து சென்று  பொதுத்துறை நிறுவனமாக மாறிய பிறகு பெருமளவு வளர்ச்சியடைந்திருக்க வேண்டிய துறை!.   புதிது புதிதாக எத்தனையோ  தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட இந்த தொலைபேசி துறையில் காலடி எடுத்து வைத்து அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன!. ஆனால் BSNL -க்கு அடிப்படை கட்டுமானம்,  அனுபவம் வாய்ந்த் ஊழியர்கள் இருந்தபொழுதும் பலமடங்கு வளர்ச்சிக்கு  பதில்  தேய்ந்து கொண்டு வருகிறது!. 

                அதற்க்கு முக்கியமான காரணம் நிர்வாக குறைபாடு. (நிர்வாக திறமை என்பது சம்பளத்தை கட் செய்வது,  ஊழியர்களை குறைப்பது என்பது அல்ல!)

                   தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தான்  சந்தாதாரர்கள் அனுமதி இல்லாமல்  தொலைபேசி இணைப்புக்கு ஏதாவது கட்டண சேவையை கொடுத்து அவர்களுக்கு தெரியாமலேயே காசை பிடுங்குவார்கள்!. ஆனால்......!
                    BSNL  தங்கள் நிர்வாக திறமையை காட்ட இப்படி போங்கு ஆட்டம் ஆடலாமா!?

(இந்த பதிவை எழுதி முடித்த வேளையில்  ஜூவி-இல்  ஒரு செய்தி வந்தது!. இதையும் படித்துவிட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள். http://www.vikatan.com/juniorvikatan/Area-rounds/23334-bsnl-cheating-dindukal-computer.html#cmt241)

===================================================================

          ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் இருந்தாராம்.  அதே பள்ளியிலேயே அவருடைய மகனும் படித்துக்கொண்டிருந்தான்.  அவன்தான் வகுப்பில் வருடா வருடம் முதல் மாணவன்.   சென்ற வருடத்தில் புதிதாக அதே வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவன் நன்றாக படித்து முதல் மாணவருக்கான பரிசை பெற்றான்.   பார்த்தார் ஆசிரியர், தன் மகன் மீண்டும் முதலிடம் பெற வேண்டும் என எண்ணி.   எளிதான ஒரு  காரியம் செய்தார்!.

                முதலிடம் பெற்ற மாணவனை பள்ளியிலிருந்தே நீக்கினார்!.

              இந்த கதை எதற்க்குச்  சொல்கிறேன் என்றால்.........!

அறிமுகமான ஒருவருடத்திலேயே, சன் நியூஸ் தொலைக்காட்சி சேனலை பின் தள்ளி முதலிடம் பெற்ற புதிய தலைமுறை சேனலை சன் டைரக்ட், சுமங்கலி விஷன் போன்றவற்றில் இருந்து நீக்கிய சன் குழுமத்தின் சிறுபிள்ளை தனத்தை என்னவென்று சொல்வது!?
===================================================================
 பிள்ளையார் பால் குடிப்பது,    அண்ணன் தம்பிக்கு ஆகாது அதனால் பச்சை, மஞ்சள் என கலர் கலராக   புடவை கட்டவேண்டும்,    பேயை விரட்ட வீட்டு வாசல் தோறும் நாமம் போட்டு வைக்கவேண்டும் போன்ற யாரோ ஒரு குறுக்குப்புத்தி ஆசாமி கிளப்பிவிட்ட புரளியை தொடர்ந்து சமீபத்தில் கிளப்பி விடப்பட்ட வதந்தி பிறந்த குழந்தை பேசியதாகவும், அது புதிதாக பிறந்திருக்கும் குழந்தைகளை தன்னுடன் அழைத்து செல்லப்போகிறேன் என்று கூறிவிட்டு இறந்து விட்டதாகவும் சொன்னதாம்!   இதை நம்பி மாநிலம் தாண்டி செய்தி தீயாய் வேலை செய்து,  தேங்காய் வியாபாரிகளுக்கு கொஞ்சம் காசை சேர்த்துக்கொடுத்தது.   நல்லவேளை தேங்கை உடைத்து பரிகாரம் செய்யவேண்டும் என்று சொன்னார்கள்!.   காதில், கழுத்தில் கிடப்பதை தூக்கி எரியவேண்டும் என்று சொல்லியிருந்தால்...................!, 

           என்னால் ஓடி...., ஓடி...., அவைகளை பொறுக்க வேண்டி இருந்திருக்குமே என்ற கவலையில் இருந்தேன்!
===================================================================
  தொலைக்காட்சி இல்லை என்றால் எப்படி இருக்கும்......!    உண்மையிலேயே பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் உருப்பட வாய்ப்பு ஏற்படும்!. 

              கடந்த இரண்டு வாரங்களாக SUN TV - இன் ஸ்மார்ட் கார்ட்ஐ தூக்கி தூர வைத்ததில் பசங்க ஸ்கூல் விட்டு வந்ததும்  ஹோம் வொர்க், விளையாட்டு தவிர்த்து,    நான் சின்ன வயதில் மேற்கொண்ட   கதை புத்தகங்கள் படிப்பது,   ஓவியம் வரைதல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்  ( நீ என்ன உருப்பட்டுவிட்டாயா? என்று கேள்வி கேட்க கூடாது!)  இதற்காக நானும் என் மனைவியும் பெரிய தியாகம் செய்து விட்டதாக ஒரு நினைப்பு மனசுக்குள்!. 

                                   நல்லாதான் போகுது!. பார்க்கலாம்!!.
===================================================================
 செப்டெம்பர் 2 முதல் மதுபானக்கடைகள் மூடப்படும் என்று ஒரு செய்தி பத்திரிக்கை வாயிலாக உலவுகிறது.    அது உண்மையாக இருந்தால்,  கண்டிப்பாக எனது அடுத்த ஓட்டு ஜெ-வுக்குதான்.     தமிழகம், குறிப்பாக  இளய சமுதாயம் உருப்பட வேண்டும் என நினைத்தால்  கூடிய விரைவில் இந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும்.   ஒரு வரையரை  இல்லாமல் போய்விட்டது .      மொட்டை போடுவதாக வேண்டி இருக்கிறேன்!   சரக்கில் வாய் கொப்பளிக்கும் என் மாமாவுக்கு!.

    மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று டாஸ்மாக் போர்டில் எழுதிவைத்துவிட்டு இந்த கேடு கேட்ட செயலை அரசே செய்யலாமா?

               காந்தியின் ஆன்மா அக்டோபர் 2-ல் சாந்தி அடையட்டும்!
===================================================================         
நிலக்கரி சுரங்க ஊழல் - செய்தி!

===================================================================

No comments:

Post a Comment