BSNL இணைய இணைப்பு வைத்துள்ளேன். கடந்த மூன்று மாதங்களாக தொலைபேசி பில்லில் One time charges என்ற பெயரில் சுமார் ரூ. 100 வீதம் கட்டணம் சேர்த்துள்ளார்கள். விவரத்தில் அந்த தொகை Hungma Music on Demand என்ற சர்விஸ் க்காக பிடித்துள்ளதாக இருந்தது. இது சம்பந்தமாக காரைக்குடி BSNL அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டதற்க்கு "உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருப்பார்கள். நீங்கள் சம்மதித்து add on செய்திருப்பீர்கள்" என்றார். நான் இல்லை என்று மறுத்தபோது, "உங்கள் பிள்ளைகள் இதை செய்திருக்கலாம்" என்றார். அவர்களும் அப்படி செய்யவில்லை என்று உறுதிபட கூறிய பொழுதும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
சில நாட்கள் கழித்து இது சம்பந்தமாக இன்னொரு அதிகாரியிடம் "தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தான் இந்த மாதிரி கோல்மால் வேலைகளை செய்யும் என்றால் பொதுத்துறை நிறுவனமான BSNL லுமா இப்படி" என்று காரமாக கேட்டபிறகு "இந்த மாதிரி add on சர்வீஸ்-களை தனியாருக்கு விட்டுவிட்டதாகவும் அவர்களே இப்படி சேர்த்திருக்கலாம்" என்றார். எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை.