Jul 30, 2011

நொறுக்குத்தீனி!

                 “எப்படி இருந்த இருந்த மதுரை  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இப்படி ஆயிடுச்சே  என்று மதுரை வந்து செல்லும் பயணிகள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், கலெக்டர் சகாயம் களத்தில் இறங்கி மாட்டுத்தாவணியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டிருக்கிறார்.  அடைசலான கடைகளை இல்லாமல், இப்போது ஒரு நேர்த்தி தெரிகிறது, மக்கள் நடந்துசெல்லும் பாதையில் இருந்த முறுக்கு கடை, டீ கடை, பழக்கடை என்று சகலமும் அகற்றப்பட்டுள்ளது நல்ல விசயம்.  நியாயமான கழிவறை கட்டணம் வாங்குகிறார்கள் இன்று வரை.  எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பது அல்லக்கைகளை அடக்கி வைக்கும் ஆட்சியாளர்களின் கைகளில்!
_____________________________________________________________________________   
                    
                          சமீபத்தில் எனக்கும் என்  நண்பர்கள் வட்டாரத்திற்கும் ஒரு மெயில் பார்வர்ட் ஆகி வந்தது.  அதில்  ஒரு வயதான மூதாட்டியின் படத்தை போட்டும், இந்த மெயிலை ஒரு பத்து பேருக்கு பார்வர்ட் செய்ய வேண்டும், இல்லையேல் அவர்களுக்கு அது நடக்கும், இது நடக்கும் என்று ஒரு பீதியை கிளப்பி  அந்த மெயில் இருந்தது.   அப்படி பார்வர்ட் செய்தால் அவர்களுக்கு நல்லது நடக்குமாம்.   அந்த மெயிலை எனக்கு பார்வர்ட் செய்தவர்களுக்கு நடந்த நல்லவிசயம் என்னவென்று எனக்கு தெரியாது.  ஆனால் அந்த மெயிலை பார்வர்ட் செய்யாத எனக்கு கெட்டவை எதுவும் இன்றுவரை நடக்கவில்லை என்பது உண்மை.      பலவருடங்களுக்கு முன்பு பிட் நோட்டீஸ் அடித்து வெங்கடாசலபதி பெயரை சொல்லி இப்படி வரும், இப்போது நாவீனமாகி விட்டதால் இமெயிலில் அந்த மூடநம்பிக்கை விதைக்கப்படுகிறது.  அதுவும் வடக்கே இருந்து. 
        எனக்கு இன்னொரு  சந்தேகம். யாரோ ஒரு விவகாரம் பிடிச்ச ஆள், நம் இந்தியாவில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள்? என்று கணக்கெடுக்கிறார்களோ! என்னவோ! ( பார்வர்ட் செய்த நண்பர்கள் கோபப்படக்கூடாது ).
 யாராவது அந்த மெயிலை பார்க்க வேண்டும் என்றால் email ID கொடுங்கள் தவறாமல் அனுப்பிவைக்கிறேன்!
_____________________________________________________________________________

          
             பாபா ராம்தேவை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். – பாலிவுட் நடிகை ராக்கி பேட்டி.
 எனக்கு வந்த ஒரு SMS ஜோக்,   
 இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் வருமானம்........
போஸ்டல் அசிஸ்டண்ட்  :14 லட்சங்கள்
டீச்சர்                    : 20 லட்சங்கள்
என்ஜீனியர்               : 200 லட்சங்கள்!
டாக்டர்                   : 250 லட்சங்கள்!!
IAS அதிகாரிகள்            :700 லட்சங்கள்!!!
சன்யாசி : (ராம்தேவ்)      :1177  கோடிகள்!!!! 
         :(சத்ய சாய்பாபா) :40000 கோடிகள்!!!!!!.
         எனவே,  உன் வாழ்கை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துகொள்.  –என்றிருந்தது.
     பாலிவுட் நடிகை ராக்கி சவந்த், சாமியார் ராம்தேவை திருமணம் செய்துகொள்ள விரும்புதாக சொல்வதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. பின்னே ஒரு அஞ்சல் எழுத்தரையா திருமணம் செய்து கொள்வார்?.
___________________________________________________________________________                               
             ஒரு காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க போனால், முதலில் வெள்ளை பேப்பர் வாங்கி வரச்சொல்வார்கள் என்பது யதார்த்தம்.  திரைப்படங்களிலும் இதை விமர்சிப்பார்கள்.
ஆனால் எனக்கு நேர்ந்த சம்பவம், இதில் மாறுபட்டு காவல் நிலையங்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், நல்லதையும் செய்வார்கள் என்பதை காட்டுகிறது.
ஒரு கூட்டம் நடத்துவதற்கு ஒலிபெருக்கி கட்ட அனுமதி வாங்க  நண்பர்களுடன் சிவகங்கை காவல் நிலையம் சென்றபொழுது,  விண்ணப்பம் எழுதித்தர சொன்னார்கள்.  நாங்கள் வெள்ளை பேப்பர் வாங்க வெளியில் செல்ல முற்பட்டபொழுது, அங்குள்ள ஒரு காவலர் தடுத்து நிறுத்தி,  பேப்பர் பேனா வைத்து எழுத அட்டை எல்லாம் கொடுத்து எழுதித்தர சொன்னது, காலம் காலமாக காவலர்கள் மீது வைத்திருந்த தவறான எண்ணத்தை பொய்யாக்குவதாக இருந்தது.   காவல் துறை பொது மக்களின் நண்பன். என்பதை ஒரு சிலரிடமோ, ஒரு சில இடங்களிலோ நிரூபிக்காமல் பரவலாக்க வேண்டும்!.
நீங்க மனசு வச்சா நாடு முன்னேறுங்க! மனசு வைங்க!!
_____________________________________________________________________
          ரசித்த FACEBOOK கமெண்ட்ஸ்கள்:
ஒரு கட் பனியன், டர்க்கி டவல். மைனர் செயின், ரெண்டு விரல்ல மோதிரம் இந்த காஸ்ட்யுமோடு பல்லு விளக்கிட்டு இருந்ததா, அவன் புது மாப்பிள்ளை!.
ஒரு பெண் ஒரு ஆணை காதலிக்கும் விசயம் அந்த பெண்ணுக்கு மட்டுமே தெரியும்!.  ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கும் விசயம் அந்த பெண்ணை தவிர மற்ற அனைவருக்கும் தெரியும்!.
என்ன கொடுமை சார்!!.

ரசித்த ஜோக்:
"அமைச்சர் இல்லேங்கறிங்க. ஆனா, போர்டுல "உள்ளேனு இருக்கே?"
"ஆமாங்க அவரு  "உள்ளேதான்" இருக்கார் தப்பா புரிஞ்சுகிட்டிங்க!"
______________________________________________________________________
 சுனாமி, கதிர்வீட்சு என்று அடுத்தடுத்து அடிவாங்கி நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்த ஜப்பானிய மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஜப்பானிய பெண்கள் கால்பந்து அணி, இறுதிப்போட்டியில் அமெரிக்காவை தோற்க்கடித்து   பெண்கள் உலகக்கோப்பை-2011  -னை கைப்பற்றியுள்ளது. 
சோதனை காலங்களிலும் சாதிக்க பிறந்தவர்கள்! 
 
____________________________________________________________________

 இன்றும் நம் மனதை வருடும்   இந்த பாடலை
 பாடியவர் :பாம்பே ஜெயஸ்ரீ. 
 பாடல் வரிகள்  : தாமரை
 இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
 படம்: மின்னலே!
இங்கே கேட்டு மகிழுங்கள்!

2 comments:

  1. Very interesting and nice to read. best wishes mathi sir

    ReplyDelete