“எப்படி இருந்த இருந்த மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இப்படி ஆயிடுச்சே” என்று மதுரை வந்து செல்லும் பயணிகள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், கலெக்டர் சகாயம் களத்தில் இறங்கி மாட்டுத்தாவணியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டிருக்கிறார். அடைசலான கடைகளை இல்லாமல், இப்போது ஒரு நேர்த்தி தெரிகிறது, மக்கள் நடந்துசெல்லும் பாதையில் இருந்த முறுக்கு கடை, டீ கடை, பழக்கடை என்று சகலமும் அகற்றப்பட்டுள்ளது நல்ல விசயம். நியாயமான கழிவறை கட்டணம் வாங்குகிறார்கள் இன்று வரை. எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பது அல்லக்கைகளை அடக்கி வைக்கும் ஆட்சியாளர்களின் கைகளில்!
_____________________________________________________________________________
சமீபத்தில் எனக்கும் என் நண்பர்கள் வட்டாரத்திற்கும் ஒரு மெயில் பார்வர்ட் ஆகி வந்தது. அதில் ஒரு வயதான மூதாட்டியின் படத்தை போட்டும், இந்த மெயிலை ஒரு பத்து பேருக்கு பார்வர்ட் செய்ய வேண்டும், இல்லையேல் அவர்களுக்கு அது நடக்கும், இது நடக்கும் என்று ஒரு பீதியை கிளப்பி அந்த மெயில் இருந்தது. அப்படி பார்வர்ட் செய்தால் அவர்களுக்கு நல்லது நடக்குமாம். அந்த மெயிலை எனக்கு பார்வர்ட் செய்தவர்களுக்கு நடந்த நல்லவிசயம் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த மெயிலை பார்வர்ட் செய்யாத எனக்கு கெட்டவை எதுவும் இன்றுவரை நடக்கவில்லை என்பது உண்மை. பலவருடங்களுக்கு முன்பு பிட் நோட்டீஸ் அடித்து வெங்கடாசலபதி பெயரை சொல்லி இப்படி வரும், இப்போது நாவீனமாகி விட்டதால் இமெயிலில் அந்த மூடநம்பிக்கை விதைக்கப்படுகிறது. அதுவும் வடக்கே இருந்து.

எனக்கு இன்னொரு சந்தேகம். யாரோ ஒரு விவகாரம் பிடிச்ச ஆள், நம் இந்தியாவில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள்? என்று கணக்கெடுக்கிறார்களோ! என்னவோ! ( பார்வர்ட் செய்த நண்பர்கள் கோபப்படக்கூடாது ).
யாராவது அந்த மெயிலை பார்க்க வேண்டும் என்றால் email ID கொடுங்கள் தவறாமல் அனுப்பிவைக்கிறேன்!