நான் கல்லூரி படித்து முடித்ததும், சிலரைப்போல் அதாவது காதல் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் சொல்லுவாரே “ வில்லனாகி, ஹீரோவாகி, அப்படியே நேரடியா சி.எம். ஆகவேண்டும்” என்று அல்லது ஒரு பாடல் முடிவதற்குள் டாட்டா, பிர்லா ரேஞ்சுக்கு எங்கேயோ போவாங்களே!, அதுமாதிரி இல்லாவிட்டாலும் கொஞ்சம் கனவுகளை சுமந்துகொண்டு நானும் சென்னையில் ஒரு காலைப்பொழுதில் காலடி எடுத்துவைத்தேன். அங்கே எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தாலும் பிறகொரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி விரிவாக பதிவிடுகிறேன். இப்போது நான் சொல்ல வந்தது, எனது பங்கு சந்தை அனுபவத்தை பற்றி. நான் அங்கு பங்குச்சந்தை இடைத்தரகர் ஒருவரின் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன்.
துவக்கத்தில் தாராளமானது வைத்து சம்பளம் ரூபாய் 1000 கொடுத்தார்கள். அந்த நிறுவனத்தில் மேனேஜர் வேலை என்று சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது அலுவலகத்தை கூட்டிப்பெருக்கும் வேலைக்கார அம்மாவை தவிர்த்து நான்மட்டும்தான் சம்பளக்காரன். எனக்கு அப்போது சம்பளம் பெரிதாக தெரியவில்லை. காரணம் பங்குசந்தையை ஒரு கை பார்க்கவேன்டும் என்ற எண்ணம் இருந்ததால். அந்த கால கட்டத்தில் பங்குச்சந்தை கணினிமயமாக்கப்படவில்லை. ஆன்லைன் விற்பனை, டிமேட் கணக்கு கிடையாது.
பங்குசந்தையில் கத்திரிக்காய் கணக்காக கூவி கூவி ஷேர் விற்பார்கள். அதையும் அப்போதைய தூர்தர்சனில்தான் பார்த்திருக்கிறேன். மாலை மூன்று மணிக்கு மேல்தான் பங்குகள் என்ன விலைக்கு போயின என்று தெரியவரும்.
ஆனால் சென்னையில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் கூட பங்குகளை வாங்கி விற்று நம்பிக்கை இழக்காமல் முடிந்தால் கையில் காசு பார்த்துக்கொண்டிருப்பார்கள். எல்லோரும் பங்குசந்தையில் பங்குகள் வாங்கி விற்று லட்ச லட்சமாக சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!.
எனக்கு அந்த (துர்)பாக்கியம் அந்த நிறுவனத்திலிருந்து விலகும்வரை கிட்டவில்லை. காரணம் எனக்கு சம்பளம் 1000-லிருந்து 2000-வரை உயர்தப்பட்டலும் சென்னையை பொருத்தவரை கையில் வாங்கும் சம்பளம் திருவல்லிக்கேணி மேன்சன் வாடகைக்கும், சாப்பாட்டிற்கும், மாதம் இருமுறை தேவி காம்ப்ளக்சில் பார்க்கும் சினிமாவிற்கும் போதவில்லை. மாத கடைசியில் ஊரிலிருந்து மணியார்டர் வந்தால்தான் மெஸ் சாப்பாடு கிடைக்கும்.