Nov 20, 2012

கருத்து சொல்லலாமா?

     கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி மெகா ஸ்டார்களை வைத்து எடுத்த சமீபத்திய படங்களான முகமூடி, தாண்டவம், மாற்றான் போன்றவை திரைக்கதையில் சொதப்பியதால் தியேட்டரை விட்டு நன்றாக ஓடுகிறது (தியேட்டரைவிட்டு) .    சூர்யா+கே.வி.ஆனந்த் கூட்டணி என்ற ஒரே காரணத்தினால் 'மாற்றான்' நன்றாக இருக்கும் என்று நம்பி குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை  சென்றபொழுது தியேட்டரில் எங்களுடன் சேர்த்து மொத்தம் 13 பேர் இருந்தார்கள்.   ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று  சமீபத்தில் பார்த்து ரசித்த படம் பீட்சா.  ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தை  வைத்து நல்லாதான் பயமுறுத்துராங்க!   நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம்.  கலைஞர் டி‌வி நாளைய இயக்குனரில் வெற்றிபெற்ற  கார்த்திக் சுப்பாராஜ் தன் திறமையை அகன்ற திரையிலும் நிரூபித்திருக்கிறார்.
                             
*********************************************************************************************************************
       
          இந்த தீபாவளிக்கு முன்பும்   பின்பும் தென்மாவட்டங்களில் நடந்த படுகொலைகள் அதை ஒட்டி நடந்த கலவரங்கள்,  கடையடைப்புகள், போக்குவரத்து நிறுத்தம் என்று ஒரே கலவர பூமியாக இருந்தது.    தீபாவளியை நிம்மதியாக கொண்டாட முடியாத சூழ்நிலை இப்பகுதிகளில் நிலவியது..   காவல் துறை உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது இதன் உச்சம்!

                இப்பகுதிகளில் வருடந்தோறும் நிகழும் இம்மாதிரியான சம்பவங்களுக்கு அடிப்படை காரணத்தை அரசு அலசி ஆராய வேண்டும்.

                தொழில், வேலை வாய்ப்புகள்   இம்மாவட்டங்களில் வளர்ச்சியடையாததே   முதன்மை காரணம்.   சமீபத்தில்கூட  பல்வேறு தொழிற்சாலைகளுக்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்  கூட சென்னையை சுற்றியே பல்வேறு  தொழிற்சாலைகள் அமைய வாய்ப்பு வளங்கப்பட்டுள்ளன.   தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்கள்  தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.  

                                      தொழில்,  வேலை வாய்ப்புகள்  பெறுகியுள்ள நகரங்களில் இத்தகைய சாதியக்கலவரங்கள் ஏற்பட வாய்ப்பில்லாமல் சமூக ஒற்றுமை நிலவுகிறது.

                                  இனியாவது சென்னையை தாண்டி தென் மாவட்டங்களுக்கு ஒன்றிரண்டு தொழிற்சாலைகளை தள்ளிவிட்டால் மாநிலம் சமச்சீரான வளர்ச்சிகண்டு, சாதிய கலவரங்களும் ஒழிய வாய்ப்பு ஏற்ப்படும்.


இதெல்லாம் எனக்கே தோணுதே...., உங்களுக்கு தோணாமலா........ இருக்கும்ம்ம்.......!
*********************************************************************************************************************
டிவிட்டியத்தில் சில: 

பெட்ரோல் விலை ரூ.1.20 குறைப்பு!- இதுதான் தெளிய வச்சு அடிக்கிறதோ?

           
கடித்த கொசுவை கையில் பிடித்து பார்த்த பிறகு மகிழ்ச்சி ஏற்படுகிறது: அது டெங்கு கொசு இல்லை என உறுதிபடுத்தபட்டதால்   

இன்வெர்ட்டர் பயன் படுத்தாதவர்களின் மின் பங்கை அபகரிக்கும் குற்ற உணர்வு மின்வெட்டு சமயத்தில் ஏற்படுகிறது!       

ஒரு தடவை பொய் பேசினாலும், மை பூசினாலும் கடைசிவரைக்கும் மெயின்டைன் பண்ணனும் # பேக்ட்

எனக்கு ஒரு விசயம் புரியவில்லை! #இரண்டுமணி நேரம் இடைவெளிவிட்டு, விட்டு, விளம்பரத்தை காட்டி அதற்க்கு ஏன் நீயா நானா என்று பெயர் வைத்தார்கள்?

தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்கள், பெரும்பாலானவர்களுக்கு செய்யும் உதவி "சார் சைடு ஸ்டாண்ட்"

இரண்டாவது உதவி "லைட் எரியுது!"   

படித்து ரசித்த டிவிட்:

  குழந்தையாய் இருக்கும்பொழுது கோடிக்கணக்கில் இருக்கும் உலகஅதிசயங்கள் வளர்ந்தவுடன் வெறும் ஏழாகி விடுகின்றன

*********************************************************************************************************************

       ராம் படத்திற்காக யுவன் சங்கர் ராஜ இசையில், ஜேசுதாஸ் தன்  இனிமையான குரலில் வசீகரித்த பாடல்,   சூப்பர் சிங்கரில் சந்தோசின் குரலில் மேலும் ஒரு ஈர்ப்பை ஏற்ப்படுத்தியது.   அனுபவித்து பாடுவது என்பது இதுதான்!



*****************************************************************************************************************

கொஞ்சம் தாமதமாகிவிட்டது! 

ஜேர்மன் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் 49 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனில் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஜேர்மனியின் பான் நகருக்கு அருகே உள்ள பேட் காடஸ்பெர்க்கிலிருந்து கடந்த 1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி கடிதமொன்று, பிரிட்டனில் உள்ள பேனா நண்பருக்கு அனுப்பப்பட்டது. இந்த கடிதம் 49 ஆண்டுகளுக்கு பின், கடந்த மாதம் 29ஆம் திகதி பிரிட்டனின் பெர்க்ஷயர் பகுதியில் உள்ள டெரிக் லெவிசுக்க கிடைத்துள்ளது. 

இதுகுறித்து லெவிஸ் கூறுகையில், ஜேர்மனியில் உள்ள கட்ரன் ரென்ட்ராப் என்ற பெண்ணும், நானும் 17 வயதிலிருந்து பேனா நண்பர்களாக இருந்தோம். அவளது தந்தையின் பிரிட்டன் வருகை குறித்து எனக்கு எழுதிய கடிதம் தான், இப்போது என் கையில் கிடைத்துள்ளது. அந்த காலத்தில் அஞ்சல் குறியீட்டு எண் நடைமுறையில் இல்லை. இது கடிதம் தாமதமாக கிடைத்ததற்கு ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தபால் 49 ஆண்டுகள் தாமதமாக வினியோகிக்கப்பட்டதற்கு நாங்கள் காரணமில்லை என ராயல் மெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
                                  தாமதமானாலும் சரியான முகவரிக்கு கொடுத்தமா!?இல்லையா? அத பாருங்க!
**********************************************************
    மும்பை கடையடைப்பை பற்றி கருத்து சொன்ன பெண்ணையும், அதற்க்கு லைக் போட்ட பெண்ணையும் மும்பை காவல் துறை கைது செய்திருக்கிறார்கள்!   கருத்து பரிமாற்றம் என்பது ஒரு ஆக்கபூர்வமான ஒரு விவாதம் தான்.  கலைஞரும், பவர் ஸ்டாரும் நினைத்தால் முக்கால்வாசி FACEBOOK தமிழர்கள் மீது புகார் கொடுக்கலாம்.    அந்த பெண்ணின் கருத்து சரியல்ல எனில் அதில் பதிலளிக்க வாய்ப்புள்ளது.  அதை விடுத்து, புகார் செய்தார்கள் என்பதற்காக கைது என்பது,  என்ன ஒரு  .......!

                        அய்யோ .......இந்த மாதிரி நான் கருத்து சொல்லலாமா......?  
இது சம்பந்தமாக  தற்போதைய செய்தி:

No comments:

Post a Comment