பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வாட்டி
எடுக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல மருத்துவமுஊறைகளை கையாண்டு வருகின்றனர்.
இதில் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பது நிலவேம்பு கசாயம். இதற்கு பல்வேறு
மருத்துவ குணங்களும் உள்ளன. சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நிலவேம்பு
மூலிகையின் பங்கு அதிகம் உள்ளது. ஒரு சிறந்த கிருமி நாசினி இதனால் உடலில் நோய்
எதிப்பு சக்தி அதிகம் உருவாகின்றது.
நிலவேம்பு இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் வளரும் ஒரு செடி
வகையாகும். இதில் சீமை நிலவேம்பு, சூரத்து நிலவேம்பு என இரு
வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.
இதனை சிரட்குச்சி, காண்டகம், கிராதம், கிரியாத்து, கிராகதி,
நாட்டுநிலவேம்பு, அனாரியத்தித்தம், காண்டம் கோகணம் என
பல பெயர்களில்அழைக்கின்றனர்.
வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.
இதனை சிரட்குச்சி, காண்டகம், கிராதம், கிரியாத்து, கிராகதி,
நாட்டுநிலவேம்பு, அனாரியத்தித்தம், காண்டம் கோகணம் என
பல பெயர்களில்அழைக்கின்றனர்.
Tamil - Nila Vembu
English - Creat
Sanskri - Bhunimba
Malayalam - Kiriyatta
Telugu - Nila vembu
Botanical Name - Andrographis paniculata
இதன் இலை தண்டு, வேர், பூ, காய் (சமூலம்) அனைத்தும் மருத்துவப் பயன்
English - Creat
Sanskri - Bhunimba
Malayalam - Kiriyatta
Telugu - Nila vembu
Botanical Name - Andrographis paniculata
இதன் இலை தண்டு, வேர், பூ, காய் (சமூலம்) அனைத்தும் மருத்துவப் பயன்
கொண்டவை.
வாதசுரம் நீரேற்றம் மாற்றுஞ் சுரதோடே
காதமென ஓடக் கடியுங்காண் மாதரசே
பித்த மயக்கறுக்கும் பின்புதெளி வைக்கொடுக்கும்
சுத்த நில வேம்பின் தொழில்
(அகத்தியர் குணபாடம்)
குடல் பூச்சி நீங்க:
வயிற்று பூச்சிகள் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலின் வலிமை குறைந்து நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றோம். வயிற்று பூச்சிகள் நீங்க நிலவேம்பு நீரை நீரில் கொதிக்கவைத்து காஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் வயிற்று பூச்சி நீங்கும்.
உடல் வலு பெற:
உடல் வலிமையின்றி மெலிந்துகாணப்படுபவர்கள் நிலவேம்பின் பூ மற்றும் காய்களை கசாயமாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலிமை அடையும்.
மயக்கம் தீர:
சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தொடர்ந்து நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வந்தால் சரியாகிவிடும்.
பசியை தூண்ட:
பசியால் அவதிப்படுபவர்களை காட்டிலும் பசியின்றி அவதிப்படுபவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுகள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் நிலவேம்பு பூ, மற்றும் காய் பகுதியை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்துவந்தால் பசி நன்றாக ஏற்படும். அதே போன்று பித்தம் சார்ந்த வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த பாதிப்பில் இருந்து விடுபட இந்த கஷாயம் உதவுகிறது.
தலை வலி நீங்க:
அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை இரண்டு வேளையும் பருகி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறைந்து தும்மல் இருமல் போன்ற பாதிப்புகள் சரியாகும்.
குழந்தைகளுக்கு :
வயிற்று பொருமல் மற்றும் கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்கவைத்து ஆறவைத்து தினமும் 5 மிலி கொடுத்து வந்தால் வயிற்று பொருமல் சரியாகும்.
விஷ காய்ச்சல் குணமாக:
நிலவேம்பு 15 கிராம், கிக்சிலத் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம், இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.
அஜீரணம் சரியாக:
நிலவேம்பு (பூ, காய்) காய்ந்தது 16 கிராம், வசம்புத்தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத்தூள் 4 கிராம், கோரைக்கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதை 1 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்து தினமும் அருந்தி வந்தால் உடல் வலு பெறும் மேலும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
தகவல் நன்றி: நக்கீரன், தினகரன்