Dec 24, 2012
Dec 13, 2012
ஒரு டிசம்பர் தினம்!
எம்.ஜி.ஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மெரினா பார்க்கலாம், எம்.ஜி.ஆர் சமாதி பார்கலாம் என்று எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து சுற்றுலா கிளம்பி வரும், எம்.ஜி.ஆரை இன்றும் தெய்வமாக நினைக்கும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
ஆனால் "அங்கு இரட்டை இலை சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் செலவில் கட்சி சின்னம் அமைப்பது தவறு" என்று தி.மு.காவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, அரசின் சார்பில், "அது இரட்டை இலை சின்னம் இல்லை...... அது வெற்றியை குறிக்கும் சின்னம்!" என்றும், "பறக்கும் குதிரையின் இறகுகள்". என்றும் வாதிட்டுள்ளார்கள்.
எனக்கு, எப்படி படுத்துக்கொண்டு பார்த்தாலும் அப்படியெல்லாம் தெரியவில்லை! உங்களுக்கு?
*******************************************************************************************************************
எங்கள்
பகுதியில் ஒரு குறிப்பிட்ட தினசரி பத்திரிக்கை தவிர்த்து வேறு தின பத்திரிக்கைகள் வராததால், ஏதோ தினசரி செய்திகளை அறிந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் அதை
வாங்கிக்கொண்டிருக்கிறேன். கடந்த
வாரம் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு போடப்பட்டிருந்த பத்திரிக்கையுடன் ஒரு காலண்டரும்
சேர்த்து போட்டிருந்தார்கள். அதில்
விலை பற்றி குறிப்பிடாததால் நான்
இலவசம் என்று எண்ணியிருந்தேன். பிறகுதான்
கவனித்தேன். அன்றைய
பத்திரிக்கை விலை
ரூபாய் 12 என்று. (மற்ற நாட்களில் ரூ.4) காலண்டர் விலை ரூ 8 என்று மறைமுகமாக
நிர்னையித்திருந்தார்கள்.
எனக்கு வருடந்தோறும் இலவசமாக நான்கைந்து காலண்டர்கள் கிடைப்பதால், அந்த
ஏஜெண்டிடம் எனக்கு இந்த காலண்டர் வேண்டாம், பில்
தொகையில் ரூ.8 கழித்துக்கொள்ளுங்கள் என்றேன். அதற்க்கு அவர் முடியாது சார், அது அன்றைய
பத்திரிக்கையின் விலை.
சேர்த்து தான் வழங்கப்படும் என்றார்.
நான் ஏமாற்றப்படுகிறேன் என்பதை உணர்ந்து இந்த தின பத்திரிக்கையின் மதுரை வினியோக அலுவலகத்திற்க்கு ஃபோன் செய்து. "ஊரெல்லாம் அநியாயம்
நடப்பதாக சுட்டிக்காட்டும்
உங்கள் அநியாயத்தை எந்த பத்திரிக்கையில் பிரசுரிப்பது" என்று சற்றே, கோபமாக கேட்டபிறகு அந்த
காலண்டரை திரும்ப எடுத்துக்கொள்வதாக சொன்னார்கள். பின்னே, இதை
அவர்களிடம் கேட்காமல் டீ கடை பெஞ்சில்
உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டா இருக்கமுடியும்?
எனக்கு 8
ரூபாய் செலுத்தவேண்டும் என்ற கோபம் இல்லை, "என் விருப்பம் இல்லாமல் என்னிடம் ஒரு பொருளை விற்பனை செய்யப்பட்டவிதம்
" என்னை
கோபப்படுத்தியது!
இந்த நிகழ்வை கேட்டால் கிடைக்கும் ask இல் பதிவிட்டதன்மூலம் என் நிலைப்பாட்டிற்க்கு ஆதரவு வழங்கிய நண்பர்களுக்கும், கேபிள் சங்கர் அவர்களுக்கும் நன்றி!
இந்த நிகழ்வை கேட்டால் கிடைக்கும் ask இல் பதிவிட்டதன்மூலம் என் நிலைப்பாட்டிற்க்கு ஆதரவு வழங்கிய நண்பர்களுக்கும், கேபிள் சங்கர் அவர்களுக்கும் நன்றி!
ஒரு யூ ட்யூப் வீடியோ இந்த நிமிடம் வரை 164,003,004 ஹிட்ஸ்களை பெற்றிருக்கிறது. இது யூ ட்யூப் வரலாற்றில் அதிக பட்ச எண்ணிக்கையாகும். தென்கொரிய பாப் பாடகர் PSY ஆடிப்பாடி வெளியிட்ட இந்த வீடியோ "கங்கணம் ஸ்டைல்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்டைல் நடனம் இன்று உலகம் முழுதும் பரபரவென்று பற்றி பரவி வருகிறது.
எல்லோரும் கலாச்சாரத்தை ஒரு வழிபண்ண கங்கணம் கட்டிக்கிட்டுதான் திரியுறாங்க!
*********************************************************************************************************************
நமது உறவுப்பினைப்புகளை எந்த எல்லை வரை உங்களால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்!. உங்கள் அத்தையின் தம்பியுடைய மாமனாரை எங்காவது ஒரு குடும்ப விழாவில் சந்திக்கும் பொழுது என்ன உறவு சொல்லி அழைப்பது என்பன போன்ற குழப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கிறதா? கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்!. அதுமிட்டுமில்லாமல் நம் பெற்றோர்கள் நமக்கு அறிமுகப்பதத்திவைத்த உறவுகள் அனைவரையும் ஞாபகத்தில் கொள்ள நம்மால் இயலவில்லை. நம் நிலைமை இப்படி இருக்கும்பொழுது, நாம் நமது வாரிசுகளுக்கு அவர்களை எப்படி அறிமுகபடுத்த முடியும்?
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இணையத்தில் தேடியபொழுது எனக்கு ஒரு அருமையான family tree -யை உருவாக்கக்கூடிய ஒரு இணையத்தளம் கிடைத்தது.
அது www.geni.com பயன்படுத்த எளிதாகவும், உபயோகமாகவும் இருந்த்தது. இதைவிட சிறந்ததாக வேறு இணையதளம் இருந்தால் எனக்கு சிபாரிசு செய்யவும்!
" ஏன்னா உறவு அறுந்துடக்கூடாது பாருங்க!, அதான்!!"
*********************************************************************************************************************
*********************************************************************************************************************
நண்பர் விஜயகுமாருடன் நாமக்கல்லில் பின்னிரவு பேருந்தை கணக்கில் கொண்டு இரவுக்காட்சி "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்திற்க்கு எவ்வித எதிர்பார்புமின்றி சென்றேன்! ஒரு வருடமாக காதலித்து, மூன்று நாளில் திருமணத்திற்க்கு தயாராகும் கதாநாயகன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் பொழுது ஒரு விபத்து, அதன்மூலம் கடந்த ஒருவருட ஞாபகமறதி(காதலித்த பெண்ணையும், தன் திருமணத்தையும் கூட மறந்து விட்டார்) அதைத்தொடர்ந்து, அவரின் நண்பர்கள் மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண்ணுக்கும் தெரியாமல், சிகிச்சை, திருமணம் என்று கஷ்டப்படுகிறார்கள்! நடிகர்கள் அனைவரும் சீரியசாக நடிக்க பார்க்கும் ரசிகர்களுக்கு அவ்வளவும் காமெடி! நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு முழுப்படத்தையும் ரசித்து சிரித்தேன்!
நன்றி புதுமுக இயாக்குனர் பாலாஜி தரணீதரன்!
பீட்ஸா மாதிரி எளிமை & நன்று!
********************************************************************************************************************
ஒரு கொசு'றுத் தகவல்
இன்று நமக்கெல்லாம் மெகா
வில்லனாக அவதாரம் எடுத்திருக்கும், கொசுவுக்கு 47 பற்கள், மழைத்துளிகளிடையே நனையாமல்
புகுந்து பறக்கக்கூடிய வல்லமை பெற்றவை!. பறக்கும் பொழுது ஒரு வினாடிக்கு 300 முதல் 600 முறை சிறகடிக்கும். அதுதான் நாம்
காதுக்கு கேட்கும் அந்த ரீங்காரம்! பெண்கொசுக்கள் மட்டுமே கடிக்கக்கூடியவை!
பிறந்து ஒரு வாரமே வாழும் இவை உலகம் முழுவதும்
வருடத்திற்கு 10 லட்சம் மனிதர்களை கொன்று
குவிக்கிறது!
நான் கொசு!
*********************************************************************************************************************
கிறிஸ்து பிறப்பதற்க்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் வசித்த மாயன் என்ற ஒரு குறிப்பிட்ட நாகரீக வம்ஸத்தினர் எழுதிய காலண்டர் டிசம்பர் 21, 2012 வரை மட்டுமே உள்ளதாகவும், அதன் பிறகு அந்த காலண்டரில் விசயங்கள் இல்லாததால் டிசம்பர் 21 அன்று உலகம் அழிந்து விடும் என்று அறிவு ஜீவிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதை ஏன் அப்படி நினைக்க வேண்டும், கீழ்க்கண்ட பிற காரணங்கள் இருக்கலாம் அல்லவா?
1. அந்த காலண்டரை செதுக்கிக்கொண்டிருக்கும் பொழுது, உழி உடைந்து போயிருக்கலாம்! அல்லது கூர்மலுங்கி இருக்கலாம்!, அதன் பிறகு வேறு வேலை இருந்து அதை கவனிக்க போயிருக்கலாம்!
2. அந்த வேலையை மெனக்கெட்டு செய்துகொண்டிருந்த நபர் கூலி கட்டுபடியாகாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்!
3. இந்த நூற்றாண்டில் வாழும் நம்மை ஏப்ரல் ஃபூல் செய்ய முயற்சி செய்து, டிசம்பர் ஃபூல் செய்திருக்கலாம்!.
4. பாதி வேலை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, இந்த வேலையை பார்க்கிறதுக்கு, பேசாம டினோசருக்கு பேன் பார்க்க போகலாம் என்று நினைத்திருக்கலாம்!.
*********************************************************************************************************************
இதை ஏன் அப்படி நினைக்க வேண்டும், கீழ்க்கண்ட பிற காரணங்கள் இருக்கலாம் அல்லவா?
1. அந்த காலண்டரை செதுக்கிக்கொண்டிருக்கும் பொழுது, உழி உடைந்து போயிருக்கலாம்! அல்லது கூர்மலுங்கி இருக்கலாம்!, அதன் பிறகு வேறு வேலை இருந்து அதை கவனிக்க போயிருக்கலாம்!
2. அந்த வேலையை மெனக்கெட்டு செய்துகொண்டிருந்த நபர் கூலி கட்டுபடியாகாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்!
3. இந்த நூற்றாண்டில் வாழும் நம்மை ஏப்ரல் ஃபூல் செய்ய முயற்சி செய்து, டிசம்பர் ஃபூல் செய்திருக்கலாம்!.
4. பாதி வேலை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, இந்த வேலையை பார்க்கிறதுக்கு, பேசாம டினோசருக்கு பேன் பார்க்க போகலாம் என்று நினைத்திருக்கலாம்!.
Subscribe to:
Posts (Atom)