Feb 29, 2012

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!

             அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

                இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.

Feb 27, 2012

சுஜாதா ஒரு தீர்கதரிசியும் கூட!

    (27.2.2012) சுஜாதாவின் நான்காவது நினைவு நாள். சுஜாதா  எழுதாதது எதுவும் இல்லை! இலக்கியம், கதை, கவிதை, கட்டுரை, அறிவியல் விசயங்கள் என எதையும்  விட்டுவைக்கவில்லை. இன்று அவர் தனது "கற்றதும் பெற்றதும்" கட்டுரை தொகுப்பில் 2010 எப்படி இருக்கும் என்று கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்!  அவற்றில் பல உணமையாகி இருக்கின்றன.


2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.