Jan 24, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்! ...இன்றைய இளைஞர்களுக்கு!

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று.... உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.


2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.


குளிர்காலத்துக்கு ஏற்ற காய்கள், பழங்கள், கீரைகள்!


 
சீசனுக்கு ஏற்ற காய்கறி...கள், பழங்கள் உட்கொள்வது உடலுக்கு ஊட்டம் தரும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பனிக்காலத்தில் இந்த காய்கறிகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

அதிரடி ஆரஞ்சு
சிட்ரஸ் அமிலச்சத்து நிறைந்த பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது. இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்தது. இதில் உள்ள பொட்டாசியம், போலேட், தாது உப்புகள், நார்ச்சத்து உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது.

ஊட்டம் தரும் ஆப்பிள்
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர் தேவையில்லை என்பார்கள். அந்த அளவிற்கு பனிக்காலத்தில் ஆப்பிள் சாப்பிடுவது பயன்தரக்கூடியது. நொறுக்குத் தீனிக்கு பதிலாக ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு உற்சாகம் தரும்.


Jan 8, 2012

என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா?

தனுஷின் கொலைவெறி பாடல் இந்தியா தாண்டி ஜப்பானிலும் வெறித்தனமாக பாடிக்கொண்டிருப்பதாக தகவல்.   இந்த பாடல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு உணமையான காரணம் தனுஷா அல்லது இந்த பாடலின் இசை அமைப்பாளர் அனிருத்தா என்பது தவிர்க்கப்பட்ட கேள்வி!  

       இந்த பாடலை பலரும் பலவகைகளிலும் ரீமேக் செய்யப்பட்டாலும்,  தமிழ் மேல் ஒரு உண்மையான பற்று கொண்டு  இலங்கை யாழ் நகரத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் இந்த பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.  இந்த பாடலை இயற்றி, பாடி இசையமைத்தவர் எஸ்.ஜெ.ஸ்டாலின்.  இந்த பாடல் இந்த நிமிடம் வரை 1 லட்சத்து 67 ஆயிரம் ஹிட்களை பெற்று பாராட்டுகளை குவித்துக்கொண்டிருக்கிறது!        


Jan 5, 2012

தண்ணீர் (water for health)

உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல்நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம்.
ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட உடலை மேம்படுத்தவும் தண்ணீர் நல்ல சிகிச்சையாக உள்ளது என்றால் அது மிகையாகாது. உடல் இளைப்பது, எய்ட்ஸ் பாதித்தவர்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது என்றால் அது தண்ணீர் சிகிச்சைதான்.
தண்ணீர் சிகிச்சை என்றால் ஏதோ புதிய சிகிச்சை முறை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதுதான் தண்ணீர் சிகிச்சையாகும்.